என்னுடைய சிநேகிதியும் அவளுடைய பேரக் குழந்தைகளும் நானும் ஒரு சிறிய நடை பயிற்சிக்குச் சென்றோம். அவள் குழந்தையின் தள்ளுவண்டியைத் தள்ளியபடியே நடந்தாள். தன்னுடைய நடைகளெல்லாம் வீணாகின்றன என்றாள். ஏனெனில், தான் கையில் அணிந்திருக்கும் கணிப்பானில் இவை எண்ணப்படுவதில்லை. தான் கைகளை விசி நடக்கவில்லையாதலால், அவை எண்ணப்படுவதில்லை என்றாள். ஆனால், இந்த நடைகளெல்லாம் அவளுடைய உடல் சுகாதாரத்திற்கு உதவுமே என்றேன். ‘ஆம்” என்று பதிலளித்து, சிரித்தாள். ‘ஆனால், நான் அந்த எலக்ட்ரானிக் கருவியில் தங்க நட்சத்திரம் பெற விரும்புகிறேன்” என்றாள்.
அவளுடைய எண்ணத்தை நான் புரிந்துகொண்டேன்! ஆனால், நாம் ஏதோ ஒன்றினைக் செய்யும்போது அதற்கான விளைவு உடனடியாகக் கிடைக்காவிடில், அது நம் இருதயத்தைச் சோர்வடையச் செய்யும். ஆனாலும் பலாபலன்கள் எப்பொழுதும், உடனடியாகக் கிடைப்பதில்லையே அல்லது உடனடியாகத் தெரிவதில்லையே.
அப்படியானால், நாம் செய்யும் நல்ல காரியங்கள், அதாவது ஒரு நண்பனுக்கு உதவுவது, அல்லது அறியாத ஒருவரிடம் கனிவாக நடந்துகொள்ளல் போன்றவை பயனற்றது என நினைக்கத் தோன்றுமல்லவா! கலாத்தியாவிலுள்ள சபைக்கு பவுல் விளக்கும் போது, ‘மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்” (கலா. 6:7) என்கின்றார். எனவே நாம், ‘நன்மை செய்கிறதில் சோர்ந்து போகாமல் இருப்போமாக் நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்” (வச. 9). நன்மை செய்வது மட்டும் இரட்சிப்பைப் பெறுவதற்கான வழியல்ல. நாம் அறுவடை செய்வது இவ்வுலகிலோ அல்லது பரலோகத்திலோ என்பதைக் குறித்து வேதாகமம் தெளிவாகக் கூறவில்லை. ஆனால், நாம் உறுதியாக சொல்லலாம், ‘நாம் ஓர் ஆசீர்வாதத்தை அறுவடை செய்வோம்” (வச. 9).
நன்மை செய்வது கடினம் தான். ஏனெனில், அதற்கான பலனை நாம் எப்பொழுது அறுவடை செய்வோம் என்பது தெரியாது. ஆனால், என்னுடைய சிநேகிதி நடப்பதால் உடல் வலிமையைப் பெற்றுக்கொள்ள முடிவதால் நாமும் நன்மையானவற்றை தொடர்ந்து செய்வோம். ஏனெனில், ஆசீர்வாதம் வந்து கொண்டிருக்கின்றது.
எல்லா பலாபலன்களும் உடனடியாகவோ அல்லது
நாம் பார்க்கக் கூடியதாகவோ இருக்கும் என்று கூறமுடியாது.