சமீபத்தில் நான் நியூயார்க் பட்டணத்திற்குச் சென்றிருந்தபோது, என் மனைவியும் நானும் ஒரு பனிபொழிவின் சாயங்காலத்தில், தைரியமாக அதனூடே செல்ல விரும்பினோம். எனவே நாங்கள் எங்கள் விடுதியிலிருந்து கியூபன் சிற்றுண்டியகம் வரையிலும் மூன்று மைல் பயணத்திற்கு ஒரு வாடகை கார் ஒன்றினை எடுத்தோம். வாடகைக் கார் சேவை பதிவில் விளக்கங்களைப் பார்த்த போது, நான் அதிர்ச்சியடைந்தேன். ஒரு சிறிய தொலைவு பயணத்திற்கு 1547.26 டாலர்கள் என குறிப்பிட்டிருந்தனர். அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு, மேலும் பார்த்த போது தான், நான் தவறுதலாக எங்கள் வீட்டிற்கு திரும்புவதற்கு எனப் பதித்திருந்ததைக் கவனித்தேன். அது பல நூறு மைல்களுக்கு அப்பாலுள்ள இடம்!
நீ தவறான செய்தியின் மீது செயல்பட்டுக் கொண்டிருந்தால் அதன் முடிவு எப்பொழுதும் அழிவுக்கு நேராகத்தானிருக்கும். எனவேதான் நீதிமொழிகள், ‘உன் இருதயத்தை புத்திமதிக்கும், உன் செவிகளை அறிவின் வார்த்தைகளுக்கும் சாய்ப்பாயாக” என வலியுறுத்துகின்றது (நீதி. 23:12). அறிவிலிகளிடமும், தங்களுக்கு அதிகம் தெரியுமென நடிப்பவர்களிடமும், தேவனுக்கு தங்கள் முதுகைக் காட்டுபவர்களிடமும் ஆலோசனையைத் தேடுவாயானால், நிச்சயமாகப் பிரச்சனைகளையே சந்திக்க நேரிடும். ‘மூடன்… உன் வார்த்தைகளின் ஞானத்தை அசட்டை பண்ணுவான்” (வச. 9) அவர்கள் நம்மை வழிவிலகிப்போகப் பண்ணுவார்கள், உதவமாட்டார்கள், தவறாக வழிகாட்டுவார்கள், இன்னும் அழிவுக்குள்ளாக்கும் ஆலோசனைகளையே தருவர்.
ஆனால், உன் செவியை ‘அறிவின் வார்த்தைகளுக்குச் சாய்ப்பாயாக” (வச. 12) நம்முடைய இருதயத்தை தேவனுடைய விடுதலை தரும் ஆலோசனைகளுக்கும் தெளிந்த நம்பிக்கையின் வார்த்தைகளுக்கும் திறபப்பாயாக. தேவனுடைய ஆழமான வழியைக் கண்டுபிடித்தவர்களுக்கு செவி கொடுப்போமாகில் அவர்கள் நம்மை தேவ ஞானத்தைப் பெறவும், அதனைப் பின்பற்றவும் உதவுவர். தேவ ஞானம் ஒரு போதும் நம்மை பாதை தவற விடாது. ஆனால், அது நம்மை ஜீவனுக்கு நேராகச் செல்ல ஊக்கப்படுத்தி, முடிவுபரியந்தம் வழிநடத்தும்.
மூடனின் ஞானம் நம்மை பாதையில்லாத இடத்தில் கொண்டுபோய்விடும்,
தேவ ஞானமோ புதிய வழிகளைத் திறக்கும்.