எங்கள் பட்டணத்தில், என் வீட்டினருகிலுள்ள காப்பியகத்தின் பெயர் ‘பீக்கா” இது ஸ்வீடன் வார்த்தை. இதற்கு குடும்பத்தினரோடும் உடன் பணிபுரிபவர்களோடும் அல்லது நண்பர்களோடும் உடன் பணிபுரிபவர்களோடும் அல்லது நண்பர்களோடும் ஒர் இடைவெளியில் காப்பியும், சிற்றுண்டியும் எடுத்துக் கொள்ளலாம் என அர்த்தம், நான் ஸ்வீடன் நாட்டினன் அல்ல. ஆனாலும் ஃபீக்காவின் உற்சாகம், நாம் இயேசுவைப் பற்றி நேசிக்கும் ஒரு காரியத்தை எனக்கு விளக்கியது. இயேசுவும் பிறரோடு உணவருந்தவும், இளைப்பாறவும் ஓர் இடைவெளியை எடுத்துக் கொண்டார்.
இயேசுவும் பிறரோடு சேர்ந்து உணவருந்தியதும் தற்செயலாய் நடைபெற்றவையல்லவென வேத வல்லுனர்கள் சொல்கின்றனர். வேதவல்லுனர் மாற்கு கிளான்வில் அவற்றை, பழைய ஏற்பாட்டில் குறிப்பிட்டுள்ள இஸ்ரவேலரின் விருந்தினையும் பண்டிகையும் போன்ற ஒரு ‘மகிழ்ச்சியான இரண்டாம் விருந்து” என அழைக்கின்றார். ‘முழு உலகிற்கும் மகிழ்ச்சி, கொண்டாட்டம் மற்றும் நீதியின் மையமாக” இஸ்ரவேலரை தேவன் வைத்திருந்ததைப் போன்று இயேசுவும் விருந்தின் மையமாகத் திகழ்ந்தார்.
5000 பேரை போஷித்தது முதல் கடைசி ராப்போஜனம் மற்றும் உயிர்த்தெழுந்த பின்னர் இரண்டு சீடர்களோடு உணவருந்தியது வரையில் (லூக். 24:30) இயேசுவின் போஜன ஊழியம், நம்மையும் நம்முடைய தொடர் போராட்டங்களிலிருந்து விடுபட்டு சிறிது நின்று அவரோடு சில நேரம் செலவிட அழைக்கின்றது. அந்த இரண்டு சீடர்களும் இயேசுவோடு உணவருந்தும் மட்டும் இயேசுவை உயிர்த்தெழுந்த கிறிஸ்துவாக கண்டுபிடிக்க முடியவில்லை. ‘அவர்களோடு அவர் பந்தியிருக்கையில் அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார். அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு அவரை அறிந்தார்கள்” 9வச. 30-31) அவரே உயிர்த்தெழுந்த கிறிஸ்து எனக் கண்டுகொண்டனர்.
சமீபத்தில் என்னுடைய நண்பனோடு அந்த ஃபீக்காவில் அமர்ந்திருந்து சூடான சாக்லேட் பானமும், சுருள்களும் சாப்பிட்டபோது, நாங்கள் இயேசுவைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். அவரே நம் வாழ்வில் ஜீவ அப்பம் நாமும் அவரோடு போஜனபந்தியில் நேரம் செலவிட்டு அவரைக் குறித்து இன்னும் தெரிந்து கொள்வோம்.
வாழ்வு தரும் வார்த்தைகளை உட்கொள்ள நேரம் செலவிடு.