கடைசியாக ஜனவரி 8 ஆம் தேதி 1964 ஆம் ஆண்டு பதினேழு வயது நிரம்பிய ராண்டி கார்ட்னர் பதினொரு நாள், இருபத்தைந்து நிமிடங்கள் தான் செய்யாத ஒன்றைச் செய்தான். அவன் தலை சாய்த்துத் தூங்கினான். அவன் கின்னெஸ் புத்தகத்தின் உலகப் பதிவை முறியடிக்க விரும்பினான். ஒரு மனிதனால் எவ்வளவு நேரம் தூங்காமல் இருக்க முடியமென காட்ட விரும்பினான். மென் பானங்களைக் குடித்தும், மைதானத்தில் பந்து விளையாடியும் பந்து வீசியும், கார்ட்னர் ஒன்றரை வாரத்திற்குத் தூக்கத்தை தள்ளி வைத்தான். கடைசியாக, அவன் நிலை குலைந்து போவதற்கு முன்பாக, அவனுடைய சுவை உணர்வு, நுகர்வு, கேட்கும் திறன் ஆகியவற்றை ஒவ்வொன்றாக இழந்தான். பல ஆண்டுகளுக்குப் பின்னர், அவன் வன்மையான தூக்கமின்மை வியாதியால் பாதிக்கப்பட்டான். அவன் உலகப் பதிவை நிர்ணயித்தான். அத்தோடு மனிதனுக்கு தூக்கம் மிக அவசியம் என்பதை உறுதிப்படுத்தினான்.
நம்மில் அநேகர் நிம்மதியான தூக்கத்தைப் பெற போராடுகின்றோம். கார்ட்னர் தன்னுடைய தூக்கத்தை வேண்டுமென்றே தடுத்துக் கொண்டதைப் போலல்லாமல், அநேக பல காரணங்களால் தூங்க முடியாமல் தவிக்கின்றோம். மலைபோல பதட்டங்கள், நாம் அடைய முயற்சிப்பதைக் குறித்த பயம், பிறருடைய எதிர்பார்ப்புகளின் மீது பயம், என பலவகையான கவலைகளால் நடுக்கத்தோடு வாழ்கின்றோம். இந்தக் கவலைகளையெல்லாம் நிறுத்திவிட்டு நிம்மதியாக ஓய்வெடுப்பது என்பது இயலாததாகிவிடுகின்றது.
‘கர்த்தர் வீட்டைக் கட்டாராகில் அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா” என சங்கீதக்காரன் (சங். 127:1). நம்முடைய வீணான முயற்சிகளைக் குறித்து கூறுகின்றார். தேவன் நம்முடைய தேவைகளுக்குத் தராவிடில், நம்முடைய கடின உழைப்பும், கொடுமையான முயற்சிகளும் வீணானவை. ஆனால், தேவன் நம் தேவைகளுக்கெல்லாம் கொடுத்துக் கொண்டிருப்பதால் நன்றி சொல்லுவோம். அவர் ‘தமக்குப் பிரியமானவர்களுக்கு நித்திரையளிக்கின்றார்” (வச. 2). தேவனுடைய அன்பு நம்மனைவருக்கும் கொடுக்கப்படுகின்றது. நம்முடைய பதட்டங்களையெல்லாம் தேவனிடம் கொடுத்து விட்டு, அவர் தரும் இளைப்பாறலிலும், கிருபையிலும் அமர்ந்திருக்குமாறு தேவன் நம்மை அழைக்கின்றார்.
தேவனை நம்புவது நம்முடைய பதட்டங்களை நீக்கி நம்மை அமர்ந்திருக்கச் செய்யும்.