நான் விமானத்தில் ஏறுவதற்காக வரிசையில் நின்ற போது யாரோ என்னுடைய தோளைத் தட்டினார். நான் திரும்பிய போது ஒரு மலர்ந்த வாழ்த்தைப் பெற்றேன். எலைசா என்னை உனக்கு நியாபகமிருக்கின்றதா? நான் தெரிந்த வெவ்வேறு ஜோன்களை நினைவுப்படுத்தியது. ஆனாலும் இவளை என்னால் நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை. ஒருவேளை இதற்கு முந்தைய அண்டை வீட்டுக் காரியோ? அல்லது கடந்த காலத்தில் கூடப் பணியாற்றியவரா? எனக்குத் தெரியவில்லை.
என்னுடைய குழப்பத்தைப் புரிந்து கொண்ட ஜோன், ”எலைசா, நாம் இருவரும் உயர்நிலைப் பள்ளியில் ஒன்றாகப் பயின்றோம்” என்றாள். இன்னும் என் நினைவை எழுப்பும்படி சில குறிப்புகளைத் தந்தாள். வெள்ளிக்கிழமை இரவு கால்பந்து விளையாட்டு, வெற்றியின் மீது மகிழ்ந்தது, என நினைவுபடுத்தினாள். அந்தச் சந்தர்ப்பம் விளக்கப்பட்டதும் நான் அவளை அடையாளம் கண்டு கொண்டேன்.
இயேசுவின் மரணத்திற்குப் பின் மகதலேனா மரியாள் அதிகாலையில் கல்லறையினிடத்திற்கு வந்தாள். அங்கு கல் எடுத்துப் போட்டிருக்கக் கண்டாள். அவருடைய உடலையும் காணவில்லை (யோவா. 20:1-2). இவள் பேதுருவையும், யோவானையும் அழைத்து வர ஒடுகின்றாள். அவர்களோடு மீண்டும் வந்து அவருடைய கல்லறை வெறுமையாயிருக்கக் காண்கின்றாள் (வச. 3-10). மரியாள் வருத்தத்தில், அதேயிடத்திற்குள் அலைகின்றாள் (வச. 11). அப்பொழுது இயேசு அங்கு தோன்றினார். ‘அவரை இயேசு என்று அறியாதிருந்தாள்” (வச. 14). அவரைத் தோட்டக்காரரென்று எண்ணினாள் (வச. 15).
எப்படி அவளால் இயேசுவை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை? அவருடைய உயிர்த்தெழுந்த சரீரம் அவரைக் கண்டுபிடிக்க முடியாதபடி மாறியிருந்ததா? அவளுடைய துக்கம் அவளுடைய கண்களைக் காணக்கூடாதபடி மறைத்து விட்டதா? அல்லது என்னைப் போன்று, இயேசுவும் நினைவு கூரக் கூடிய சந்தர்ப்ப்பமில்லாமல் போய்விட்டாரா? அவரை மரித்தவராக கல்லறையில் தேடிக்கொண்டிருக்க, அவர் உயிருள்ளவராகத் தோட்டத்தில் நிற்பதால் அவளால் அடையாளம் காணமுடியவில்லையா?
நம்முடைய வாழ்வில் நாம் ஜெபிக்கும் போதும், வேதம் வாசிக்கும் போதும் இயேசு நம்முடைய இருதயத்தில் மெதுவாகப் பேசுவதை, நாமும் கூட கேட்கத் தவறிவிடுகின்றோமோ?
எதிர்பாராத இடத்தில் இயேசுவை எதிர்பார்.