இராணுவ வாகனத்தோடு இணைக்கப்பட்ட பெரிய துப்பாக்கியிலிருந்து வெளிவந்த குண்டுகள், பூமியைப் பிளக்கும் ஓசையோடு அவனைச் சுற்றிலும் விழுந்தன. அந்த இளம் இராணுவ வீரன், உருக்கமாக ஜெபித்தான். ”கர்த்தாவே, நீர் என்னை இதிலிருந்து காப்பாற்றினால், நான் என்னுடைய தாயார் என்னிடம் விரும்பிக் கேட்டுக் கொண்ட வேதாகமப் பள்ளிக்குச் செல்வேன்” என்றான். தேவன் அவனுடைய ஜெபத்தை அங்கிகரித்தார். என்னுடைய தந்தை இரண்டாம் உலகப் போரில் தப்பித்து, மூடி வேதாகம நிறுவனத்திற்குச் சென்று, தன் வாழ்வை தேவ ஊழியத்திற்கென அர்ப்பணித்தார். மற்றொரு யுத்த வீரர் வேறுவகையான இக்கட்டைச் சந்தித்தார். அது அவனை தேவன் பக்கம் திருப்பியது. ஆனால், அவன் யுத்ததிற்குச் செல்வதைத் தவிர்த்த போது அவனுக்குப் பிரச்சனை ஆரம்பித்தது. தாவீது அரசனின் படைகள் அம்மோனியர்களுக்கெதிராக யுத்தம் பண்ணிக்கொண்டிருந்தபோது, தாவீது தன்னுடைய அரண்மனையில் இருந்தபோது, பிறனுடைய மனைவியைப் பார்த்தான். கேடான காரியங்களை நடப்பித்தான் (2 சாமு. 11). சங்கீதம் 39ல், தாவீது தான் செய்த பயங்கரமான பாவத்தினால் ஏற்பட்ட வேதனையிலிருந்து மீண்டுவருவதை வரிசையாக எழுதுகின்றார். ‘என் இருதயம் எனக்குள்ளே அனல் கொண்டது. நான் தியானிக்கையில் அக்கினி மூண்டது” (வச. 3) என எழுதுகின்றார்.
தாவீதின் உடைந்த உள்ளம் அவனைச் சிந்திக்க வைத்தது. ‘கர்த்தாவே, நான் எவ்வளவாய் நிலையற்றவன் என்று உணரும்படி என் முடிவையும், என் நாட்களின் அளவு இவ்வளவு என்பதையும் எனக்குத் தெரிவியும் (வச. 4) எனக் கேட்கின்றார். அவர் தன்னுடைய நம்பிக்கையையிழந்து விடவில்லை. தன்னுடைய கவனத்தை வேறெங்கும் திருப்பவும் இல்லை. ‘இப்போதும் ஆண்டவரே, நான் எதற்கு எதிர்பார்த்திருக்கின்றேன்? நீரே என் நம்பிக்கை” (வச. 7) என்று கூறி தேவனிடம் திரும்புகின்றான். தாவீதும் அவனுக்குள்ளே ஏற்பட்ட யுத்தத்தில் பிழைத்துக்கொள்வேன். பின்னர் தேவனுக்கு ஊழியம் செய்யும்படி திரும்புவேன்.
நம்மை ஜெப வாழ்விற்குள் கொண்டு வந்தது எந்தக் காரியமாயிருந்தாலும் சரி, நம்முடைய கவனம் ஜெபத்திற்கு நேராகத் திரும்பட்டும். தேவனே நம்முடைய நம்பிக்கையின் ஊற்று. நம்முடைய இருதயத்தை அவரிடம் பகிர்ந்துகொள்ள அவர் நம்மை அழைக்கின்றார்.
நாம் தேவனிடம் ஜெபத்தின் மூலம் செல்லும் போது,
நாம் மிகச் சிறந்த இடததிலிருக்கின்றோம் எனத் தெரிந்து கொள்வோம்.