நான் முதன்முதலில் பயன்படுத்திய கண்-கண்ணாடி, ஒரு சிறந்த உலகைக்காணும்படி என் கண்களைக் திறந்தது. நான் கிட்டப்பார்வையுள்ளவன். அப்படியென்றால் அருகிலுள்ள பொருட்களெல்லாம் துல்லியமாகவும், தெளிவாகவும் தெரியும். என்னுடைய கண்ணாடியில்லாமல் நான் பார்க்கும் போது, ஓர் அறையிலுள்ள பொருட்களும், தூரத்திலுள்ள பொருட்களும் மங்கலாகத் தெரியும், என்னுடைய பன்னிரண்டாம் வயதில், என்னுடைய முதல் கண்ணாடியை நான் அணிந்தபோது, கரும்பலகையிலுள்ள தெளிவான எழுத்துக்களையும், மரத்திலுள்ள சிறிய இலைகளையும், அதையும் விடமேலாக, பிறர் முகத்திலுள்ள பெரிய சிரிப்பையும் கண்ட போது இன்ப அதிர்ச்சியடைந்தேன்.
நான் நண்பர்களை வாழ்த்தும் போது, அவர்கள் சிரித்து, மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். நாம் பார்க்க முடிகின்ற ஆசீர்வாதத்தைப் போன்று, நாம் பார்க்கப்படுவதும் மிகச் சிறந்த ஈவு என்பதைக் கற்றுக் கொண்டேன்.
ஆகார் என்ற அடிமைப் பெண் தன் நாச்சியாரான சாராயின் இரக்கமற்றப் பார்வையால் பாதிக்கப்பட்டு அவளை விட்டு, ஓடிப் போனாள். அன்றைய கலாச்சாரத்தின் படி ஆகார் ‘யாருமில்லை” என்ற நிலையிலிருந்தாள். கர்ப்பவதியான அவள், தனிமையில், வனாந்திரத்தின் வழியே, உதவியற்றவளாய், நம்பிக்கையிழந்தவளாய் ஓடிக்கொண்டிருந்தாள். தேவன் அவளைக்; கண்டார். அவளும் தேவனைக் காணும்படி வல்லமையைப் பெற்றாள். ஒரு மங்கிப் போன உண்மையாக அல்ல, தேவன் அவளுக்கு உண்மையாக வெளிப்பட்டார். அந்த உண்மை தேவனுக்கு அவள் எல்ரோயீ என்று பெயரிட்டாள். அதற்கு, ‘நீர் என்னைக் காண்கிற தேவன்” என்று அர்த்தம், ‘என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா” என்றாள் (ஆதி. 16:13).
நாம் தேவனைக் காண்பது என்பது நாம் ஒருவரையொருவர் காண்பதேயாகும். என்னை யாரும் காண்பதில்லை, நான் தனிமையிலிருக்கிறேன். ஒன்றுமில்லையென்றும்படி இருக்கிறேனே என்று உணருகின்றாயா? தேவன் உன்னையும் உன்னுடைய எதிர்காலத்தையும் பார்க்கின்றார். பதிலுக்கு நாம் அவரில் நம்முடைய நித்திய நம்பிக்கையையும், ஊக்கத்தையும், இரட்சிப்பையும், மகிழ்ச்சியையும் இப்பொழுதும் நம்முடைய எதிர்காலத்திலும் காண்போம். மெய்யான ஒரே ஜீவனுள்ள தேவனை நாம் காணும்படி அதிசயமானப் பார்வையைத் தந்த ஈவுக்காக தேவனைப் போற்றுவோம்.
தேவன் என் பெயரை அறிவார், என்னைக் காண்கின்றார்.