நான் என் பெற்றோருடன் பங்கு பெற்ற ஓர் ஆலய ஆராதனையில் வழக்கப்படி, கர்த்தருடைய ஜெபத்தைச் சொல்லும் போது, நாங்கள் ஒருவரோடொருவர் கரங்களைப் பற்றிக் கொள்வோம். நான் என்னுடைய ஒரு கரத்தை எனது தந்தையின் கரத்தோடும் மற்றொரு கரத்தை என்னுடைய தாயின் கரத்தோடும் பிணைத்திருந்தேன். அப்பொழுது நான் எப்பொழுதுமே இவர்களின் மகள்தான் என்ற எண்ணம் எனக்குள்ளே தோன்றியது. நான் எனது மத்திய பருவத்தில் இருந்த போதிலும் நான் என்னை லியோ, பைலிஸ் என்பவர்களின் மகளாகவே எப்பொழுதும் கருதுவேன். நான் அவர்களின் மகள் மட்டுமல்ல, எப்பொழுதும் தேவனுடைய பிள்ளையாகவும் இருக்கிறேன் என்பதை சிந்;தித்துப் பார்த்தேன்.
அப்போஸ்தலனாகிய பவுல், ரோமாபுரியிலுள்ள சபைகளின் ஜனங்கள் தங்களை தேவனுடைய குடும்பத்தின் நபர்களாக இருப்பதையே தங்களின் அடையாளமாகக் கருத வேண்டுமென விரும்புகின்றார்கள் (ரோம. 8:15). ஏனெனில், அவர்கள் தேவனுடைய ஆவியினால் பிறந்தவர்கள் (வச. 14). எனவே அவர்கள் இனியும் ஒன்றுக்கும் உதவாத காரியங்களுக்கு அடிமைகளாக இருக்க வேண்டாம். நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர் தாமே நம்முடைய ஆவியுடனே கூடச் சாட்சி கொடுக்கின்றார் (வச. 16). நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும் கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே” (வச. 17).
கிறிஸ்துவைப் பின்பற்றுகின்றவர்களுக்கு இது என்ன வேறுபாட்டைக் காட்டுகின்றது? எளிதாகச் சொன்னால், எல்லாவற்றிலும் நாம் மாறுபட்டவர்கள். நாம் தேவனுடைய பிள்ளைகள் என்ற அடையாளம் நமக்கு ஒரு உறுதியான அஸ்திபாரத்தைத்தருகிறது. நாம் உலகத்தையும் நம்மையும் பார்க்கின்ற முறையை சீர்ப்படுத்துகின்றது. எடுத்துக்காட்டாக, நாம் தேவனுடைய குடும்பத்தின் நபர்களாகையால் நாம் அவரைப் பின்பற்றுகின்றோம். அது நம்மை நம்முடைய வசதியான வாழ்க்கையிலிருந்து வெளியே வருவதற்கு உதவுகிறது. நாம் பிறரைப் பிரியப்படுத்தும்படி வாழும் நிலையிலிருந்து நம்மை விடுவிக்கிறது.
இன்று நீ தேவனுடைய பிள்ளையாக எப்படி வாழ்வதென்பதைக்குறித்து சிந்தனை செய்.
தேவனைப் பின்பற்றுபவர்களெல்லாரும் அவருடைய பிள்ளைகள்.