இஸ்ரவேல் நாட்டில் ‘என் கேரம்’ என்ற இடத்திலுள்ள தேவாலயத்தை பார்வையிடச் சென்றிருந்த போது அந்த ஆலயத்தின் வளாகத்தில் அமர்ந்திருந்து அதன் அழகை ரசித்துக் கொண்டிருந்தேன். அங்கு அறுபத்தேழு மொசைக் கற்களில் லூக்கா 1:46-55 வரையுள்ள வார்த்தைகள் வௌ;வேறு மொழிகளில் எழுதப்பட்டிருந்த அழகினைக் கண்டு வியந்து நின்றேன். “மரியாளின் கீதம்” என்று அழைக்கப்படும் இந்த வார்த்தைகள், தேவதூதன் மரியாளிடம் அவள் மேசியாவின் தாயாகப் போகின்றாள் என அறிவித்தபோது, மரியாள் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தின வார்த்தைகளே இப்பாடல்.
ஓவ்வொரு சட்டத்திலுமுள்ள மரியாளின் வார்த்தைகள், “என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது. என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது… வல்லமையுள்ளவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்” (வச. 46-49) என ஆரம்பிக்கின்றன. அந்த மொசைக் கற்களில் பதிக்கப்பட்டுள்ள வேதாகமப் பாடல் ஒரு ஸ்தோத்திரப் பாடல். தேவன் தனக்கும் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் உண்மையுள்ளவராகவேயிருக்கிறார் என்பதை நினைத்து மரியாள் தேவனைப் போற்றிப் பாடும் பாடல்.
தேவனுடைய கிருபையைப் பெற்ற மரியாள் நன்றியுணர்வோடு, தன் இரட்சகராகிய தேவனில் மகிழ்ந்து பாடுகின்றாள் (வச. 47) தேவனுடைய இரக்கம் அவருக்குப் பயந்தவர்களுக்குத் தலைமுறை தலைமுறையாக இருக்கிறது (வச. 50). கடந்த நாட்கள் முழுவதும் தேவன் இஸ்ரவேலரைப் பாதுகாத்து வந்திருக்கிறார், தம் ஜனங்களுக்காக அவர் செய்த வல்லமையுள்ள அவருடைய செயல்களுக்காகவும் அவரைப் போற்றுகின்றார் (வச. 51) தங்களுடைய அனுதின தேவைகளையெல்லாம் தேவன் தம் கரத்திலிருந்து தருகின்றார் என்று சொல்லி நன்றி செலுத்துகின்றார் (வச. 53).
தேவன் நமக்குச் செய்துள்ள நன்மைகளையும் பெரிய காரியங்களையும் நினைத்து அவருக்குத் துதி செலுத்தும் போது நமக்கு மகிழ்ச்சியைத் தரும் என்பதை மரியாள் நமக்குக் காண்பித்துள்ளாள். இந்த கிறிஸ்மஸ் நாட்களில் நாமும் தேவன் நமக்கு கடந்த ஆண்டு முழுவதும் பாராட்டியுள்ள நன்மைகளை நினைத்துப் பார்த்து அதிக அழகான ஒரு நன்றிப் பாடலை எழுதமுடியம்.
இந்த ஆண்டு தேவன் உன்னை ஆசீர்வதித்துள்ளவகைகளையெல்லாம் ஒரு பட்டியலில் எழுது. பின்னர் அதனை அமைதியாக சிந்தித்துப்பார். அவர் செய்த நன்மையின் கதைகளைப் பிறரோடு பகிர்ந்தகொள்.