இடாகோ என்ற இடத்தில் குளிர்காலத்தில், எங்கள் வீட்டின் பின்புறம் அமைந்துள்ள பனிசறுக்கு தளத்தில் விளையாடுவதை என்னுடைய குழந்தைகள் அநுபவித்து மகிழ்வர். அவர்கள் சிறுவர்களாக இருந்தபோது பனிச்சறுக்கலைக் கற்றுக் கொள்வது அவர்களுக்குச் சவாலாக இருந்தது. அவர்களை மனமிணங்கச் செய்து, அவர்களுடைய கால்களை அந்த கடினமான குளிர் தளத்தில் பதியவைப்பது மிகவும் கடினமாக இருந்தது. ஏனெனில், கீழே விழுந்தால் அது எத்தனை வலியைத் தருமென அவர்கள் அறிந்திருந்தனர். ஒவ்வொரு முறையும் அவர்கள் கால் வழுக்கி கீழே விழ ஏதுவாகும் போது நான் அல்லது என்னுடைய கணவர் அவர்களைத் தாங்கி பிடித்து மீண்டும் அவர்கள் தங்கள் கால்களில் உறுதியாக நிற்கும்படியும் அவர்கள் தங்களின் சட்டத்தை நிலையாக பிடித்துக் கொள்ளும்படியும் உதவுவோம்.

நாம் கீழே விழும்போது யாரோ ஒருவரின் உதவும் கரங்கள் அங்குவந்து தாங்கிக் கொள்ளுவதை குறித்து பிரசங்கி புத்தகம் வெளிப்படுத்துகின்றது. பிறரோடு இணைந்து வேலை செய்வது நமக்கு இனிமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் (4:9). ஒருவர் வாழ்வில், உற்சாகத்தைக் கொண்டு வருபவன் அவருடைய நண்பன். நாம் சவால்களைக் சந்திக்கும் போது யாரேனும் நம்மருகிலிருந்து, நம்முடைய செயலுக்கும் மனதிற்கும் உறுதுணையாக இருந்தால் அது நன்மைபயக்கும். இத்தகைய உறவுகள் நமக்கு பெலனையும், ஒரு நோக்கத்தையும் ஆறுதலையும் தரும்.

நம் வாழ்வின் கடினமான பனிபோன்ற சோதனைகளில் நாம் விழுந்து கிடக்கும்போது, அருகில் உதவும்படி யாரேனும் இருப்பார்களா? அப்படியிருந்தால் அது தேவனி;டமிருந்து வரும் உதவி, அல்லது யாருக்காயினும் நண்பனின் உதவி தேவையாயிருந்தால், தேவன் அனுப்பும் நண்பனாக நாம் அவர்களைத் தூக்கி விடுவோமா? நம்முடைய துணையாளராக எப்போதும் நம்மோடிருப்பவர் தேவன் ஒருவரே. ஒருவேளை நம்மைத் தூக்கி நிறுத்த நம்மருகில் யாருமேயில்லையென உணரும்போது, தேவன் நமக்கு உதவும்படி எப்பொழுதும் நம்மோடிருக்கிறார் என்பது எத்தனை ஆறுதலைத் தருவதாகவுள்ளது (சங். 46:1). நாம் அவரை நோக்கிக் கூப்பிடும் போது நம்மைத் தூக்கி நிலை நிறுத்த, அவருடைய கரம் நம்மை உறுதியாகப் பற்றுகிறது.