சார்ல்ஸ் ஸ்பர்ஜன் 1800ஆம் ஆண்டை ஒட்டிய காலக்கட்டத்தில் லண்டன் தேவாலயத்தில் “இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்” என்ற ஆழ்ந்த பொருள் நிறைந்த ஏசாயா 49:16ஆம் வசனத்தைப் பிரசங்கிப்பதை அதிகம் விரும்பினார். “இந்த வசனத்தை நூற்றுக்கணக்கான தடவை பிரசங்கிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வசனம் ஒரு பொக்கிஷம் போன்றதாக இருப்பதால், நாம் இதை மீண்டும் மீண்டும் தியானிக்க முடியும்.

கர்த்தர் இஸ்ரவேலுக்கும், தம் ஜனத்திற்கும் கொடுத்த வாக்குத்தத்தம், மற்றும் பிதாவின் குமாரனாகிய கிறிஸ்து நமக்காக சிலுவையில் மரித்தது ஆகியவற்றிற்கு உள்ள அழகான தொடர்பை ஸ்பர்ஜன் சுட்டிக்காட்டுகிறார். “அவர் கைகளில் உள்ள காயங்கள் என்ன?… வரைவதற்கு, செதுக்குபவர் ஆணியையும், கத்தியையும் பயன்படுத்தினார். உண்மையிலேயே அவரது ஜனம், அவரது உள்ளங்கைகளில் வரையப்பட, அவர் சிலுவையில் அறையப்பட வேண்டும்”, என்று ஸ்பர்ஜன் குறிப்பிடுகிறார். தம் ஜனத்தை, தம் உள்ளங்கைகளில் வரைய தேவன் வாக்குக் கொடுத்தபடியால், நாம் நம் பாவத்தில் இருந்து விடுவிக்கப்படும்படியாக, இயேசு தன் கரங்களை சிலுவையில் நீட்டி, ஆணிகளைத் தன் கரங்களில் அடிக்கப்பெற்றார்.

ஆண்டவர் நம்மை மறந்துவிட்டார் என்று எப்போதாவது நாம் நினைக்க நேர்ந்தால், தேவன் நமக்குக் கொடுத்த வாக்குத்தத்தம் நம் நினைவுக்கு வர, நம் உள்ளங்கைகளைப் பார்த்தாலே போதும். நமக்காக அவர் தமது கைகளில், அழிக்கமுடியாத தழும்பைப் பெற்றுள்ளார். நம்மை அந்த அளவுக்கு அவர் நேசிக்கிறார்.