ஒரு சிறிய கூட்ட மக்கள் திரண்டு நின்று அங்கு புல்தரையில் சரிந்துகிடந்த ஒரு பெரிய மரத்தினைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு முதிய பெண்மணி தன் ஊன்றுகோலில் சாய்ந்து நின்றபடி, முந்திய இரவில் வீசிய புயல் காற்று, நெடுநாட்களாக வளர்ந்திருந்த எங்களுடைய எல்ம் மரத்தைச் சாய்த்து விட்டதை விளக்கினார். மேலும் அவள் நடுங்கிய குரலோடும், உணர்ச்சி வசத்தோடும் “அது எங்களுடைய அழகிய கல்சுவரை உடைத்து விட்டது. நாங்கள் திருமணமாகி வந்தபோது என் கணவர் இந்த சுவரைக் கட்டுவித்தார். இந்தக் சுவரை அவர் மிகவும் நேசித்தார். நானும் அதனை நேசித்தேன். இப்பொழுது அவரைப் போன்று இதுவும் போய்விட்டது” என்றாள்.
அடுத்த நாள் காலை மரம் வெட்டும் குழுவினர் அந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியைச் செய்வதை அவள்பார்த்துக் கொண்டேயிருந்தாள். அவளுடைய முகத்தில் ஒரு சிரிப்பு மலர்ந்தது. அந்த மரக்கிளைகளினூடே ஒரு பையன் அவளுடைய புல்தரையை சரி செய்து கொண்டிருந்தான். மேலும் இரு நபர்கள் அவள் நேசித்த அந்த கல் சுவரை பழுதுபார்த்துக் கொண்டிருந்தனர்.
நம்மைச் சுற்றியிருப்போரின் சோர்ந்த இருதயத்தைத் தூக்கி விடுதல் போன்றச் செயலை தேவன் அங்கீகரிக்கும் செயலாகத் தீர்க்கன் ஏசாயா விளக்குகின்றார். அந்த முதிய பெண்மணிக்கு அவள் விரும்பிய கல்சுவரை சரிசெய்து கொடுத்ததைப் போன்று, வெறுமனே ஆவிக்குரிய ஆராதனைசெய்வதைக் காட்டிலும் தன்னலமற்ற சேவைகளைப் பிறருக்குச் செய்வதை தேவன் அதிகம் விரும்புகின்றார் என இப்பகுதி நமக்குப் போதிக்கின்றது. தன்னலமற்ற சேவை செய்யும் அவருடைய பிள்ளைகள் மீது தேவன் இருவகையான ஆசீர்வாதத்தைத் தருகின்றார். முதலாவது நம்முடைய மனப்பூர்வமான சேவையை நலிந்தோரும், தேவையுள்ளோரும் பெறுமாறு பயன்படுத்துகின்றார் (ஏசா. 58:7-10). இரண்டாவது தேவன் இத்தகைய சேவையில் முனைந்திருப்போரை கனப்படுத்துகின்றார். நம்முடைய சேவை மனப்பான்மையை மேலும் உருவாக்கி, அவருடைய .ராஜ்ஜியத்தில் வல்லமையான கருவியாக பயன்படுத்துவார் (வச. 11-12). இன்றைய நாளில் என்ன செயலைச் செய்யப்போகின்றாய்?
பிறருக்கு ஆற்றும் தன்னலமற்ற செயல் தேவனுக்கு கனத்தைக் கொடுக்கும்.