எந்த மனிதனாவது தான் ஒரு கார் அல்லது வீடு வாங்குவதற்கு வங்கியில் கடன் பெற விரும்பும் போது, அவன் பெற்ற கடனைத் திருப்பிச் செலத்தியதாக நீண்ட சரித்திரம் இல்லையெனில், கடன் கொடுப்பவர் இந்தப் பணப்பரிவர்த்தனையிலுள்ள ஆபத்தைக் கையாள தயக்கம் காட்டுகின்றனர். இத்தகைய ஒரு செயலின் பதிவு இல்லையெனில், அந்த மனிதன் கடன் தொகையை திருப்பிக் கொடுத்து விடுவதாகத் தரும் வாக்குமூலம் போதாதென வங்கியாளர்கள் கருதுகின்றனர். எனவே கடன் வாங்குபவர் அத்தகைய நற்சாட்சி பெற்ற யாரையேனும் தேடி கண்டுபிடித்து அவர்களின் பெயரை இந்தக் கடனுக்குச் சாட்சியாக சேர்த்துக் கொள்வார். இவ்வாறு சாட்சி கையொப்பமிடுபவர், இந்தக் கடன் திருப்பிக் கொடுக்கப்படும் என வங்கிகளுக்கு உறுதி வாக்குக் கொடுக்கின்றனர்.
இவ்வாறு யாரேனும் நமக்கு பொருளாதார ரீதியாகவோ, திருமணத்திலோ அல்லது வேறெந்த காரணங்களுக்காகவோ வாக்களித்திருந்தால் நாம் அவற்றை நிறைவேற்றும்படி எதிர்பார்ப்போம். தேவனும் தாம் வாக்களித்ததை நிறைவேற்ற உண்மையுள்ளவர் எனத் தெரிந்து கொள்வோம். ஆபிரகாமிடம் தேவன் அவனை ஆசீர்வதித்து “அவனுடைய சந்ததியை பெருகப் பண்ணுவேன் (எபி. 6:14, ஆதி. 22:17) என வாக்களித்தபோது, ஆபிரகாம் தேவனுடைய வார்த்தையை நம்பினான், நாம் காணும் அகிலம் அனைத்தையும் படைத்த தேவனை விட மேலானவர் ஒருவரும் இல்லை. அவர் ஒருவரே தன்னுடைய வாக்குத்தத்தத்தை நிறைவேற்ற வல்லவர்.
ஆபிரகாம் தன்னுடைய மகனைப் பெறும்வரை காத்திருக்க வேண்டியிருந்தது (எபி. 6:15). (அவன் தன்னுடைய சந்ததியார் எவ்வளவாகப் பெருகுவார்கள் என்பதைக் காணவில்லை) ஆனால், தேவன் அவனுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதில் உண்மையுள்ளவராய் இருந்தார். தேவன் எப்பொழுதும் நம்மோடிருப்பதாக வாக்களித்துள்ளார் (13-5) நம்மைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வார் (யோவா. 10:29) அவர் நம்மை ஆறுதல் படுத்துகின்றார் (2 கொரி. 1:3-4) அவர் தம் வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவார் என்று அவருடைய வார்த்தைகளை நம்புவோம்.
தேவனுடைய வாக்குத்தத்தங்கள் என்றும் மாறாதவை.