மிக அதிகமாக பார்வையாளரின் கவனத்தை ஈர்க்கும் வார்த்தையென்னவெனின், அது அவர்களுடைய பெயரே என்பது விளம்பரதாரர்களின் முடிவு. எனவே இங்கிலாந்து தேசத்திலுள்ள ஒரு நிறுவனம், தனிப்பட்ட நபரின் பேரில் அவர்களுடைய நேரடி வர்த்தக சேவை மூலம் விளம்பரம் செய்யத் தொடங்கியுள்ளது.

நாம் நம்முடைய பெயரை டெலிவிஷனில் கேட்கும்போது மிகவும் மகிழ்ச்சியடைவோம். ஆனால், நமக்கு மிகவும் நெருக்கமானவர்கள் நம்மை அன்போடு அழைப்பதைப் போலல்லாமல், இங்கு பெயர்கள் அழைக்கப்படுகின்றன.

சிலுவையில் அறையப்பட்டு மரித்த இயேசுவின் உடலை வைத்திருந்த கல்லறையின் அருகில் மகதலேனா மரியாள் பெயரைச் சொல்லி இயேசு அழைத்தபோது (யோவா. 20:16) அவளுடைய கவனமெல்லாம் ஒரு கணம் நின்று போனது. அந்த ஒரே வார்த்தையில், தான் நேசித்துப் பின்பற்றிய போதகரை அடையாளம் கண்டுகொண்டாள். அவள் நம்ப முடியாத மகிழ்ச்சியோடு திரும்பிப்பார்க்கின்றாள். ஏற்கனவே தெரிந்திருந்த அனுபவத்தோடு அவளுடைய பெயரை அவர் சொன்னபோது,அவளுக்குச் சந்தேகமின்றி அவள் நன்கு அறிந்திருந்த இயேசு உயிரோடிருக்கிறார். மரித்தோரிடம் இல்லை என்பது உறுதியாகிவிட்டது.

மரியாள் இயேசுவோடு ஓர் அரிதான, சிறப்பான நேரத்தைப் பகிர்ந்து கொண்டாலும் ஒவ்வொருவரும் தனித்தனியே தேவனால் நேசிக்கப்படுகின்றோம். இயேசு மரியாளிடம் தான் தன் தந்தையிடம் ஏறிப்போவதாகக் கூறுகின்றார் (வச. 17) மேலும் அவர் தன் சீடர்களிடம் நான் அவர்களைத் தனியே விட்டுவிடுவதில்லை (யோவா. 14:15-18) என்கின்றார். தேவன் தன்னுடைய பிள்ளைகளுக்குள்ளே வாசம்பண்ணும்படி பரிசுத்த ஆவியானவரை அவர்களுக்கு அனுப்புகின்றார் (அப். 2:1-13).

தேவனைப் பற்றிய உண்மை மாறுவதில்லை. அன்றும் இன்றும் தேவன் தான் நேசிக்கின்றவர்களை அறிந்திருக்கின்றார் (யோவா. 10:14-15) அவர் நம்மை பெயர் சொல்லி அழைப்பவர்.