சில ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு பெண்மணி தன்னுடைய இளம் வயது மகன் ஒரு வன்முறை செயலைப் பற்றிய செய்தி தொகுப்பினைப் பார்ப்பதாகவும், தான் உடனடியாக அந்த ஒளித்தடத்தை மாற்றி விட்டதாகவும் என்னோடு பகிர்ந்து கொண்டாள். மேலும், நீ இத்தகைய காட்சிகளைப் பார்க்கத் தேவையில்லை என அவனிடம் கூறினாள். நாங்கள் இதனைக் குறித்து விவாதித்தோம். அவனுடைய மனதை ‘‘ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ…” (பிலிப். 4:8) அவற்றால் நிரப்ப வேண்டும் என்று கூறினாள். இரவு உணவிற்குப் பின் அவளும் அவளுடைய கணவரும் செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென அவர்களின் ஐந்து வயது பெண் டெலிவிஷனை நிறுத்திவிட்டாள். ‘‘நீங்கள் இத்தகைய காட்சிகளைப் பார்க்கத் தேவையில்லை” என்று அம்மாவைப் போன்ற குரலில் கூறினாள். மேலும், இப்பொழுது அந்த வேத வார்த்தைகளை நினைத்துப் பாருங்கள்” என்றாள்.
மூத்தோர்களாகிய நாம் சிறுவர்களையும்விட மேலாகச் செய்திகளைக் கிரகிக்கவும் அவற்றை மனதில் இருத்தவும் முடியும். எனினும், அந்த தம்பதியினரின் பெண் பிள்ளை வேடிக்கையாகவும், புத்திசாலித்தனமாகவும் தன்னுடைய தாயின் அறிவுரைகளை செயலில் வெளிப்படுத்தினாள். நன்கு முதிர்ச்சி பெற்ற பெரியவர்கள்கூட வாழ்வின் இருண்ட பகுதிகளையே பார்த்துக் கொண்டிருந்தால் பாதிக்கப்படுவர். இத்தகைய காரியங்களைக் குறித்து சிந்தித்த பவுல், பிலிப்பியர் 4:8 ல் ஒரு பட்டியலைக் கொடுத்துள்ளார். இது, இந்த உலகின் இருண்ட பகுதிகளையே பார்ப்பதால் நம்மில் படிந்து விடும் மன அழுத்தங்களை நீக்குவதற்கான வலிமை வாய்ந்த மருந்தாகும்.
நம்முடைய மனதை நிறைத்துள்ளவற்றைக் குறித்து கவனமாக முடிவுகள் எடுப்பதற்கு மிகச் சிறந்த வழி, தேவனைக் கனம் பண்ணி நம் இருதயத்தையும் அவருக்கேற்றபடி காத்துக் கொள்வதேயாகும்.
நாம் எவற்றை நம் மனதிற்குள் அனுமதிக்கின்றோமோ அவற்றின் தன்மையில் நம் ஆன்மா மாற்றப்படுகிறது.