‘‘சமீபத்தில் தேவன் உன்னில் கிரியை செய்ததை எப்படி கண்டு கொண்டாய்?” என்ற கேள்வியைச் சில நண்பர்களிடம் கேட்டேன். ஒரு நண்பன் பதிலளித்தான், ஒவ்வொரு நாள் காலையும் வேதத்தை வாசிக்கும்போது தேவன் கிரியை செய்வதைக் காண்கின்றேன்; ஒவ்வொரு புதிய நாளையும் நான் எதிர் நோக்க எனக்கு உதவி செய்வதில் காண்கின்றேன்; நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் அவர் என்னோடிருக்கிறார் என்று நான் காண்கின்றேன்; நான் சவால்களைச் சந்திக்க அவர் எனக்கு உதவி செய்து மகிழ்ச்சியைத் தருகின்றார். எனக் கூறினான். அவனுடைய பதில் எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. தேவனிடத்தில் அன்புகூருகின்றவர்களிடத்தில் தேவனுடைய வார்த்தைகளும் நமக்குள்ளே வாசம்பண்ணும் பரிசுத்த ஆவியானவரும் நம்மோடிருந்து நம்மில் கிரியை செய்கின்றார்.
தேவனைப் பின்பற்றுகிறவர்களுக்குள்ளே தேவனுடைய கிரியை அற்புதமாயிருக்கிறது. எபிரெயரை எழுதியவர் தன்னுடைய கடிதத்தின் முடிவில் ஆசீர்வாதம் கூறும் போது ‘‘இயேசு கிறிஸ்துவைக்கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து… (எபி. 13:21) என முடிக்கின்றார். இந்த முடிவுரையில் எழுத்தாளர் தன்னுடைய கடிதத்தின் முக்கிய கருத்தினை மீண்டும் வலியுறுத்திக் கூறுகின்றார். தேவன் நம்மைப் பின்பற்றுகின்ற தன்னுடைய ஜனங்களை பெலப்படுத்தி, தேவனுடைய நாமம் மகிமைப்படும்படியாக அவர்களில், அவர்கள் மூலமாகச் செயல்படுகின்றார்.
தேவன் நம்மில் கிரியை செய்கின்ற ஈவானது நம்மை அதிசயிக்கச் செய்கின்றது. நமக்கு விரோதமாகச் செயல்பட்ட ஒருவரை மன்னிக்கவும் கடினமான சிலரிடம் பொறுமையாயிருக்கவும் நம்மில் செயல்படுகின்றார். ‘‘சமாதானத்தின் தேவன்” (வச. 20) அவருடைய அன்பையும், சமாதானத்தையும் நம்மூலம் பெருகப்பண்ணுகிறார். சமீபத்தில் தேவன் உன்னில் எப்படி கிரியை செய்தார்?
தேவன் தம்மைப் பின்பற்றுபவர்கள்மூலம் கிரியை செய்கின்றார்.