என்னுடைய தாயாருக்கு புற்றுநோய் என்ற அறிக்கை வந்த போது, என் கணவர் வேலைக்குச் சென்று விட்டிருந்தார். நான் அவருக்கும், சில நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இச்செய்தியைத் தெரியப்படுத்தினேன். என் முகத்தை நடுங்கும் கரங்களால் மூடிக்கொண்டு “எனக்கு உதவும் கர்த்தாவே” என்று விம்மி அழ ஆரம்பித்தேன். நான் முற்றிலும் தனிமையை உணர்ந்த அந்த நேரத்திலேயே தேவன் என்னோடிருந்து என்னைத் தேற்றி, என்னருகில் இருக்கிறார் என்ற உத்திரவாதத்தை எனக்குத் தந்தார்.

என் கணவர் உடனே வீட்டிற்கு வந்தார். என்னுடைய நண்பர்கள் உறவினரின் ஆதரவும் எனக்குக் கிடைத்தது. நான் தேவனுக்கு நன்றி கூறினேன். எங்கெங்கிருந்தும், எவ்வெப்பொழுதும் நாம் அவருடைய உதவியைக் கேட்கும் போது, தயாராகவும் உண்மையுள்ளவராகவும் வந்து நம்மை அமைதிப்படுத்தும் அவருடைய பிரசன்னத்தை, நான் அந்த முதல் சில மணித்துளிகள் தனிமையாக துயருற்றபோது உண்ர்ந்தேன்.

சங்கீதம் 46ல், சங்கீதக்காரன் தேவன் நமக்கு அடைக்கலமும், பெலனும், அனுகூலமான துணையுமானவர் எனத் தெரிவிக்கின்றார். நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் குழப்பமாக இருப்பதை நாம் உணரும் போதும் நாம் நம்பியிருந்த உறுதி யாவும் நொறுக்கப்பட்ட போதும், நாம் பயப்படத் தேவையில்லை (வச. 2-3) தேவன் தள்ளாடுவதில்லை (வச. 4-7). அவருடைய வல்லமை உண்மையும் செயல் திறனுமுள்ளது. (வச. 8-9) அவர் நம்மை முடிவில்லாமல் காப்பவர். அவருடைய மாறாத தன்மையின் மீது நமக்கு நம்பிக்கையைத் தருகிறார் (வச. 10). நமக்கு உறுதியான பாதுகாப்பாக அவர் எப்பொழுதும் நம்மோடிருக்கிறார் (வச. 11).

ஜெபத்தில் ஒருவரையொருவர் தாங்கவும், ஊக்குவிக்கவுமே, தேவனைப் பின்பற்றுகிறவர்களை அவர் உருவாக்கினார். அவர் வல்லவரும், எப்பொழுதும் நமக்கு உதவ ஆயத்தமாயிருக்கிறார் என்ற உறுதியை நமக்களிக்கின்றார். நாம் அவரை நோக்கிக் கூப்பிடும் போது நமக்கு உதவி செய்ய, அவருடைய வாக்குத்தத்தங்களை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார் என நாம் அவரை நம்பலாம். அவருடைய பிள்ளைகள் மூலமாயும், அவருடைய பிரசன்னத்தாலும் அவர் நம்மைத் தேற்ற வல்லவராயிருக்கிறார்.