லண்டன் நகரிலுள்ள ஒரு குறிப்பிட்ட காபிக் கடையில் (கேஃப் ராண்டேவூ) நல்ல வெளிச்சம், வசதியான இருக்கைகள், காற்றில் மிதந்து வரும் காபி மணம். அதில் என்ன இல்லையென்றால், விலைப்பட்டியல். ஆரம்பத்தில் இது உள்ளுர் சபையால் ஒரு வியாபாரமாக ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், ஒரு வருடம் கழித்து எல்லாமே மாறிவிட்டது. முற்றிலும் வித்தியாசமானதொன்றை செய்ய வேண்டுமென்று தேவன் கூறுவதை உணர்த்த நிர்வாகிகள் “விளைப்பட்டியலில் எல்லாம் இலவசம்” என்று குறிப்பிட்டார்கள். இன்றைக்கு நீங்கள் பணம் கொடுக்காமல், காபி, கேக் சான்ட்விச் வாங்கி சாப்பிடலாம். ஒரு நன்கொடை உண்டியல்கூட கிடையாது எல்லாமே இலவசம்.
நான் அந்த நிர்வாகியிடம், ஏன் இப்படி தாரளாமாயிருக்கிறீர்கள் என்று கேட்டபோது அவர், “தேவன் எங்களை நடத்துவது போலவே நாங்கள் ஜனங்களை நடத்த முயற்ச்சிக்கிறோம்”; நாங்கள் நன்றி சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அவர் எங்களுக்குக் தாராளமாய்க் கொடுக்கிறார். நாங்கள் கற்பனைசெய்வதற்கும் அதிகமாக அவர் தயாளனாக இருக்கிறார் என்றார்.
இயேசு நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை மீட்டு தேவனோடு ஒப்புரவாக்கவே மரித்தார். அவர் கல்லறையிலிருந்து எழுந்து இன்றும் உயிரோடிருக்கிறார். இதனால் நாம் செய்த தவறான காரியங்களெல்லாம் மன்னிக்கப்பட்டு புதுவாழ்வு பெற முடியும் (எபே. 2:1-5). இதைப்பற்றிய மிக ஆச்சரியமான காரியங்களில் ஒன்று என்னவென்றால், இவை எல்லாமே இலவசம். இயேசு கொடுக்கும் புதுவாழ்வை நாம் விலைகொடுத்து வாங்கவே முடியாது. அதற்கு நன்கொடைகூட கொடுக்க முடியாது (வச. 8-9). அனைத்தும் இலவசமே!
ரான்டேவூ கபேயில் உள்ளவர்கள் காபியும் கேக்கும் பரிமாறும் பொழுது, ஜனங்களுக்கு தேவனுடைய அன்பின் தயாளத்தையும் காட்டுகிறார்கள். நாம் நித்திய ஜீவனை இலவசமாகப் பெற்றுள்ளோம் ஏனென்றால் இயேசு அதற்கான கிரயத்தைச் செலுத்திவிட்டார்.
நித்திய ஜீவன் இலவசமாய்ப் பெற்றுக்கொள்வதற்கென ஆயத்தமாக்கப்பட்டிருக்கிறது.