ஒரு காரில் ஒட்டியிருந்த பம்பர்-ஸ்டிக்கர் ஓர் பல்கலைக்கழகப் பேராசிரியரின் கவனத்தை ஈர்த்தது. அக்காரின் சொந்தக்காரர் விசுவாசிகளை கோபமடையச் செய்யும்படியாகவே தேவனைக்குறித்து எதிர்மறையான காரியங்களை கொண்ட ஸ்டிக்கரை ஒட்டியிருக்கக்கூடும் என அப்பேராசிரியர் எண்ணினார். மேலும் “விசுவாசிகளின் கோபம் கடவுள் இல்லை எனக்கூறும் அந்நாத்திகனின் கொள்கையை நியாயப்படுத்தும்படி உதவுகிறது,” என விளக்குகிறார். கூடவே, “அநேகங்தரம் தான் எதிர்பார்த்ததையே அவன் பெற்றுக்கொள்ளவும் செய்கிறான்”, என அவர் எச்சரிக்கிறார். 

இப்பேராசிரியர் தன்னுடைய விசுவாச பாதையைக்குறித்து நினைவுக்கூரும்பொழுது, கிறிஸ்துவைகுறித்ததான சத்தியத்தை எண்ணி அவருடைய கிறிஸ்தவ நண்பர் ஒருவர் அக்கறையுடன் தன்னை அணுகியதை நினைவுகூருகிறார். தன் நண்பனிடம் “சத்தியத்தை எப்படியாவது தெரிவித்துவிட வேண்டும் என்கிற ஒரு அவசர உணர்வு காணப்பட்டாலும், அதை கோபத்தின் சுவடே இல்லாமல் தெரிவித்தால்,” அன்று தான் பெற்ற உண்மையான மரியாதையையும் கிருபையையும் ஒருபோதும் மறப்பதில்லை என அப்பேராசிரியர் கூறுகிறார். 

இயேசுவைப் பிறர் நிராகரிக்கும்பொழுது அநேகமாய் விசுவாசிகள் காயமடைந்து மனக்கசப்புக்குள்ளாகிறார்கள். ஆனால் பிறர் தன்னை நிராகரிப்பதைக்குறித்து இயேசு என்ன நினைக்கிறார்?  எப்பொழுதும் பல அச்சுறுத்தல்களையும் வெறுப்பையும் இயேசு எதிர்கொண்டபொழுதும், அவர் தன்னுடைய தெய்வசாயலை குறித்து சந்தேகித்ததேயில்லை. ஒரு சமயம் இயேசு ஒரு கிராமத்திற்கு சென்றபொழுது, அவரை ஏற்றுக்கொள்ள அக்கிராமத்தினர் மறுத்துவிட்டனர். உடனே யாக்கோபும், யோவானும் அவர்களுக்குப் பதிலடி கொடுக்க எண்ணி, “ஆண்டவரே, எலியா செய்தது போல வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா?” என்று இயேசுவிடம் கேட்டனர் (லூக். 9:54). இயேசு அப்படி ஒன்றும் செய்ய விரும்பாததால், “திரும்பிப் பார்த்து (அவர்களை) அதட்டி(னார்)” (வச. 55). சொல்லப்போனால், “உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்” (யோவா. 3:17).

நம்முடைய சொல்லாலோ (அல்லது) செயலாலோ தேவனுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்கிற அவசியம் அவருக்கில்லை என்கிற செய்தி நமக்கு வியப்பளிக்கலாம். அவருடைய பிரதிநிதியாக அவரை பிரதிபலிப்பதையே அவர் விரும்புகிறார்! அதற்கு நம்முடைய நேரமும், முயற்சியும், நிதானமும், அன்பும் தேவைப்படும்.