2015ஆம் ஆண்டு, ஒரு சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம், உலகெங்கும் 24 கோடியே 50 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும், அவை ஒவ்வொரு ஆண்டும் 15 சதவீத விகிதத்தில் பெருகுவதாகவும் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமன்றி ஒவ்வொரு நாளும் ஸ்மார்ட் போன்கள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முதல் வங்கிக் கொள்ளை வரை படம்பிடிக்கின்றன. பெருகி வரும் பாதுகாப்பை பாராட்டினாலும் சரி அல்லது குறைந்து வரும் அந்தரங்க எல்லையை கண்டனம் தெரிவித்தாலும் சரி, உண்மை என்னவெனில் எங்கும் கேமராக்கள் நிறைந்த சமூகத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஆனால், தேவனோடு உள்ள நம்முடைய உறவிலே, கண்காணிப்பு கேமராக்களின் கண்காணிப்பைக் காட்டிலும் அதிக அளவு வெளியரங்கமான செயல்பாட்டையும், பொறுப்பான நடத்தையையும் நாம் அனுபவிப்பதாக புதிய ஏற்பாட்டு புத்தகமாகிய எபிரெயர் நிருபம் கூறுகிறது. “தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்குமுன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்” (எபி. 4:12-13).

நம்முடைய இரட்சகராகிய இயேசு நம்முடைய பெலவீனங்களையும், சோதனைகளையும் அவர் அனுபவித்தும் பாவம் செய்யாதிருந்ததால், “நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்” (வச. 16). நாம் அவரைக் கண்டு பயப்படாமல், அவரண்டை கிட்டிச்சேரும் பொழுது கிருபை பெறுவோம் என்ற நிச்சயம் கொள்வோமாக.