நியூ இங்கிலாந்தில் வடக்கே உள்ள ஓர் குளிர்கால ஒடுக்கக் கூட்ட (retreat) மையத்தில் ஒருவர், “நீங்கள் பெற்ற மிகச் சிறந்த கிறிஸ்துமஸ் பரிசு எது?” என்ற கேள்வியை கேட்டார்.

அப்பொழுது விளையாட்டு வீரர் ஒருவர் ஆர்வத்துடன் பதில் அளித்தார். “எளிமையான கேள்வி. சில வருடங்களுக்கு முன்பு நான் கல்லூரி படிப்பை முடிக்கும் போது நிச்சயமாக நான் கால்பந்து வீரனாவேன் என்று எண்ணினேன். அது நடக்கவில்லை. அதனால் கோபமடைந்தேன். வாழ்க்கை கசந்துபோனது. அது என்னை வாட்டியது. அக்கசப்பை எனக்கு உதவிசெய்ய வந்தவர்களிடம் கூட காட்டினேன்” என்று அவர் பக்கத்தில் அமர்ந்திருந்த நண்பரை பார்த்தவாறு கூறினார்.

“இரண்டு வருடங்கள் கால்பந்து இல்லாமல் ஓடியது. அப்போது கிறிஸ்துமஸ் நாட்களில், இவருடைய சபையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நாடகத்தை காணச் சென்றேன்” என்று அவரின் நண்பரை சுட்டிக்காட்டினார். “இயேசுவை நான் தேடிப்போகவில்லை. என்னுடைய சகோதரியின் மகள் அந்த நாடகத்தில் இருந்தாள். அவளை காணச் சென்றேன். ஆனால் நாடகம் நடந்து கொண்டிருக்கும்போது, தீடீரென எனக்குள் ஒரு உணர்வு ஏற்பட்டது. இது சற்று வேடிக்கையான விஷயமாக தோன்றும்; ஆனால் திடீரென எனக்கு இயேசுவை சந்திக்க வேண்டும் போல் இருந்தது. அந்த மேய்ப்பர்களோடும், தூதர்களோடும் சேர்ந்து கொள்ள மனம் துடித்தது. அப்பொழுது அனைவரும் ‘சைலன்ட் நைட்’ (Silent Night) பாடலை பாடி முடித்தனர். நானோ கண்ணீர் மல்க அழுதுகொண்டு அமர்ந்திருந்தேன்.

“அன்றைக்கு தான் எனக்கு மிகச்சிறந்த கிறிஸ்துமஸ் பரிசுகிடைத்தது.” திரும்பவும் அவரது நண்பரைச் சுட்டிக்காட்டி, “இந்த மனிதன் அவருடைய குடும்பத்தை தனியே அனுப்பி விட்டு என்னோடு நற்செய்தியை பகிர்ந்து, நான் இயேசுவை சந்திப்பதற்காக நேரம் செலவிட்டார்” என்றான்.

அப்போது அவரது நண்பன் குறுக்கிட்டு “நண்பர்களே, அது தான் நான் பெற்ற மிகச் சிறந்த கிறிஸ்துமஸ் பரிசாகும்!” என்று கூறினார்.

இந்த கிறிஸ்துமஸ் நாட்களில் நாம், இயேசு கிறிஸ்துவின் பிறப்பைப் பற்றின இந்த எளிமையான கதையை மற்றவருடன் குதூகலத்துடன் பகிர்ந்து கொள்ளலாம்.