முந்தைய காலகட்டத்தில் வாழ்ந்த ஸ்காட்லாண்ட் (Scottland) போதகர், ஹென்றி டர்பன்வில்லே (Henry Durbanville) தங்கள் தேசத்தின் ஒரு சிறிய கிராமத்தில் வாழ்ந்த ஒரு வயதான தாயாரைப்பற்றி ஓர் கதை கூறினார். அப்பெண்மணி எடின்பர்க் (Edinburgh) நகரத்தை காண வேண்டும் என மிகவும் விரும்பினார். ஆனால், அங்கு செல்ல வேண்டுமானால், ரயில் வண்டியில் ஒரு நீண்ட இருண்ட சுரங்க பாதையை கடந்து செல்ல வேண்டும் என்பதை எண்ணி அப்பயணத்தை தவிர்த்து வந்தார்.
ஆனால் ஒரு நாள் எடின்பர்க் (Edinburgh) செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இரயில் வண்டி நகரத்தை நோக்கி செல்லச் செல்ல அவருடைய பதற்றம் கூடியது. ஆனால், ரயில் சுரங்கப்பாதையை கடக்கும் முன்பு கவலையுற்றதின் களைப்பினால் உறங்கிப் போனார். அவர் கண் விழித்த பொழுது நகரத்தை அடைந்து விட்டார்!
நம்மில் ஒரு சிலர் மரணத்தை காணாமல் இருக்கக் கூடும். இயேசு திரும்ப வரும்பொழுது, நாம் உயிரோடு இருப்போமானால், அவரை “மேகங்கள்மேல்” எதிர்கொள்வோம் (1 தெச. 4:13-18). ஆனால் நம்மில் அநேகர் மரணத்தை ருசிபார்த்து பரலோகம் செல்வோம். இந்த காரியம் அநேகருக்கு மிகப்பெரியப் பதற்றத்தை ஏற்படுத்துகிறது. மரண வழி மிகவும் கடினமாக இருக்கும் என நினைத்து கலங்குகிறோம்.
ஆனால், இரட்சகராகிய இயேசு கிறிஸ்து அளித்த உத்தரவாதத்தின் மேல் நம்பிக்கை உள்ளவர்களாய், இந்த பூமியிலே நாம் கண்மூடி, கண் விழிக்கும் பொழுது தேவ பிரசன்னத்திலே இருப்போம் என்பதால், இளைப்பாறக்கடவோம். “ஒரு சிறு உறக்கத்திற்கு பின் நித்தியத்திலே கண் விழிப்போம்” என ஜான் டான் (John Donne) கூறியுள்ளார்.
இயேசுவைச் சந்திப்பதே பரலோகத்தின் மிகப்பெரிய சந்தோஷமாக இருக்கும்.