அன்று காலை நேரம் இருளாயிருந்தது. சற்று தாழ கரு மேகங்கள் வானத்தை நிறைத்திருந்தன. ஆகவே சுற்றுப்புறம் சற்று மங்கியே காணப்பட்டதால், நான் புத்தகம் படிக்க மின் விளக்கை உபயோகிக்க வேண்டியிருந்தது. நான் அமர்ந்த கொஞ்ச நேரத்திலேயே அந்த அறை முழுவதும் வெளிச்சம் உண்டாயிற்று. காற்று அந்த கரு மேகங்களை கிழக்கு நோக்கி தள்ளச் செய்து, வானத்தை தெளிவுறச் செய்து, சூரியன் பிரகாசிக்கும்படி செய்ததை கண்டேன்.

அந்த அருமையான காட்சியை நன்கு கண்டுகளிக்க நான் ஜன்னலருகே சென்ற பொழுது, “இருள் நீங்கிப்போகிறது, மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது” (1 யோவா. 2:8) என்ற வசனம் என் நினைவுக்கு வந்தது. விசுவாசிகளை உற்சாகப்படுத்தும் பொருட்டு அப்போஸ்தலனாகிய யோவான் அவர்களுக்கு இதை எழுதினார். பிறரை வெறுக்கிறவன் இருளிலே சுற்றித்திரிகிறான் என்று வேறுபடுத்தி காண்பிக்கிறார். வெறுப்பு நம்மை திசை விலகி போகச் செய்யும். நல் வழியிலே நடக்க வேண்டிய உணர்வை அது நம்மை விட்டு அகற்றிவிடும்.

மற்றவர்களை நேசிப்பது சுலபமானது அல்ல. ஆனாலும் தேவனின் அன்பிலும், ஒளியிலும் ஆழ்ந்த தொடர்பு வைத்திருக்க, விரக்தி, மன்னிப்பு மற்றும் உண்மை ஆகியவை பங்களிக்கிறது என்பதை ஜன்னல் வழியாய் பார்க்கும் பொழுது நினைவுறுத்தப்பட்டேன். வெறுப்பிற்கு பதில் அன்பை நாம் தெரிந்து கொள்ளும் பொழுது, தேவனோடு உள்ள நம்முடைய உறவையும், அவருடைய வெளிச்சத்தையும் நாம் இந்த உலகிற்குக் காண்பிக்கிறோம். “தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை” (1 யோவா. 1:5).