என்னுடைய உத்தியோகத்தின் ஆரம்ப நாட்களில் நான் செய்து கொண்டிருந்த வேலையை ஒரு சேவையாகவே கருதினேன். அப்பொழுது நல்ல சம்பள உயர்வுடன் கூடிய ஒரு வேலையை வேறு ஒரு நிறுவணம் எனக்கு வழங்கியது. அந்த வேலையின் மூலம் நிச்சயமாக என்னுடைய குடும்பம் பொருளாதார ரீதியிலே பயன் பெறலாம். ஆனால் ஒரு பிரச்சனை. நான் வேறு வேலை தேடவில்லை, ஏனெனில் நான் செய்து கொண்டிருந்த வேலையை நான் மிகவும் நேசித்தேன். அதையும் தாண்டி அது என் அழைப்பாக உருவாகிக் கொண்டிருந்தது.

ஆனால் பணம்…   

எழுபது வயதை கடந்த என் தகப்பனாரை தொலைப்பேசியில் அழைத்து நிலைமையை விவரித்தேன். பக்கவாதத்தினாலும், பல வருடங்களின் மன அழுத்தத்தினாலும் கூர்மையாக இருந்த மூளையின் வேகம் இன்று குறைந்திருந்தாலும், சட்டென்று தெளிவான ஒரு பதில் அவரிடமிருந்து வந்தது. அதாவது, “பணத்தை பற்றி எண்ணாதே. அப்பொழுது நீ என்ன முடிவெடுப்பாய்?”

ஒரு நொடியிலே, என் மனம் ஒரு முடிவுக்கு வந்தது. எனக்கு மிகவும் பிடித்தமான வேலையை விடுவதற்கு பணம் மட்டுமே காரணமாக இருந்திருக்கும்! நன்றி அப்பா!

மலைப் பிரசங்கத்தின் பெரும்பாலான பகுதியை இயேசு பணத்தையும், அதன் மேல் உள்ள நம்முடைய வாஞ்சையை குறித்தும் பிரசங்கித்தார். ஐஸ்வரியத்தை திரட்டுவதைக் குறித்து ஜெபிக்க கற்றுக்கொடுக்காமல், “வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்” (மத். 6:11), என்று ஜெபிக்கக் கற்றுக் கொடுத்தார். பூமியிலே பொக்கிஷங்கள் சேர்த்து வைப்­­பதைக் குறித்து அவர் எச்சரித்தார். அவருடைய படைப்பின் மேல் அவர் எவ்வளவு அக்கறை உள்ளவராய் இருக்கிறார் என்பதை பறவைகள் மற்றும் பூக்கள் மூலம் விவரித்தார் (வச. 19-31). “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்” (வச. 33) என்று இயேசு கூறினார்.

பணம் முக்கியமானது தான். ஆனால் நம்முடைய முடிவுகளைப் பணம் தீர்மானம் செய்யக் கூடாது. கடினமான நேரங்களும், பெரிய தீர்மானங்களும் நம்முடைய விசுவாசத்திலே நாம் வளருவதற்கான சந்தர்பங்களாகும். நம்முடைய பரம பிதா நம்மை விசாரிக்கிறவராய் இருக்கிறார்.