அநேகந்தரம் நம்முடைய ஜெபங்களின் மூலமே தன்னுடைய வேலையை செய்து முடிப்பதை தேவன் தெரிந்துக்கொள்கிறார். இஸ்ரேல் தேசத்திலே மூன்றரை வருடங்களாய் இருந்த வறட்சியை நீக்க “உங்கள் தேசத்திலே நான் மழையை வருஷிக்கப்பண்ணுவேன்”, என்று எலியாவை நோக்கி தேவன் கூறியதின் மூலம் இதை அறியலாம் (யாக். 5:18). தேவன் மழையை வாக்கு பண்ணியிருந்தாலும், சில நேரம் கழித்து, “எலியா கர்மேல் பர்வதத்தினுடைய சிகரத்தின்மேல் ஏறி, தரையிலே பணிந்து, தன் முகம் தன் முழங்காலில் பட குனிந்து,” மழை வரும்படி ஊக்கமாய் ஜெபம் பண்ணினான் (1 இரா. 18:42). ஜெபம் செய்து கொண்டிருந்த பொழுது, தன்னுடைய வேலைக்காரனை அனுப்பி மழை வருவதற்கு ஏதாவது அறிகுறி உண்டோ என்று அடிவானத்தை நோட்டமிடும்படியாய், “ஏழு முறை” சமுத்திரத்தை கண்டு வரும்படியாய் அனுப்புகிறான் (வச. 43).
தாழ்மையுடன் கூடிய உறுதியான ஜெபத்தின் மூலம் தன்னுடைய கிரியையிலே பங்கு கொள்ளும்படியாய் தேவன் விரும்புகிறார் என்பதை எலியா அறிந்துக்கொண்டான். மனுஷனுடைய இயலாமைகளையும் தாண்டி, அதிசயமான வழிகளில் நம்முடைய ஜெபத்தின் மூலம் செயல்படுவதை தேவன் தெரிந்துக்கொள்கிறார். ஆகவே தான், “நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது…” என்று கூறும் அதே வேளையில், “எலியா என்பவன் நம்மைப்போலப்பாடுள்ள மனுஷனாய் இருந்தும்” (யாக். 5:16-17) என்று யாக்கோபு தான் எழுதின புத்தகத்திலே நினைவு படுத்துகிறார்.
எலியாவைப் போல உண்மையுள்ளவர்களாய், நம்முடைய ஜெபத்தின் மூலம் தேவனை சேவிப்பதை நம்முடைய நோக்கமாகக் கொண்டால், எந்த நொடியிலும் நாம் ஒரு அற்புதத்தைக் காணக்கூடிய ஒரு அருமையான உரிமையிலே நாம் பங்கு கொள்கிறோம்.
நம்முடைய பெரிதான எதிர்பார்ப்புகள் தேவனைக் கனப்படுத்துகின்றன.