எனக்கு பறவைகள் மேல் அதிகப் பிரியம். ஆகவே எனது மகள் ஆலிஸிற்காக கூட்டில் அடைக்கப்பட்ட 6 பறவைகளை வாங்கி வீட்டிற்கு கொண்டு சென்றேன். அந்தப் பறவைகளுக்கான தேவைகளை ஆலிஸ் அனுதினமும் கவனித்து வந்தாள். அதில் ஒரு பறவை நோய்வாய்ப்பட்டு மரித்து விட்டது. ஒருவேளை, பறவைகளை கூட்டிற்குள் அடைத்து வைக்காமலிருந்தால், அப்பறவைகள் நன்றாக வளரலாமோ என்று எண்ணினோம். ஆகவே மற்ற 5 பறவைகளையும் கூட்டிலிருந்து திறந்து விட்டோம். அவைகள் மிகவும் மகிழ்ச்சியுடன் வெளியே பறந்து சென்றன.
“அப்பா, ஒரு பறவையின் மரணம் மற்றப்பறவைகளை விடுதலை செய்ய வைத்தது என்பதை நீங்கள் உணர்ந்தீர்களா?” என்று ஆலிஸ் அவளது தகப்பனாரிடம் குறிப்பிட்டுக் கூறினாள்.
நமக்காக இயேசு செய்தது இதுதானே? ஒரு மனிதனின் (ஆதாம்) பாவம் உலகத்திற்கு ஆக்கினையைக் கொண்டுவந்ததுபோல, ஒரு மனிதனின் (இயேசு) நீதியினால் அவரை விசுவாசிப்பவர்களுக்கு இரட்சிப்பு கிடைக்கிறது (ரோம. 5:12–19). “நானே நல்ல மேய்ப்பன், நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்” (யோவா. 10:11) என்று இயேசு கூறினார். “அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்”
(1 யோவா. 3:16) என்று அதை செயல்படத்தக்க முறையில் யோவான் விளக்குகிறார். இது உண்மையில் சரீரப்பிரகாரமான மரணத்தைக் குறிப்பிடவில்லை. இயேசுவின் தியாகமான அன்பில் நமது வாழ்க்கையை இணைக்கும்பொழுது, “நாம் நமது ஜீவனைக் கொடுக்கிறோம்” என்று அர்த்தமாகும். உதாரணமாக நாம் நமது உலகப்பிரகாரமான பொருட்களை தேவையுள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக அவற்றை விட்டுக்கொடுக்க முன்வர வேண்டும் (வச. 17), அல்லது நமது உதவியோ அல்லது ஆறுதலோ தேவையான ஒருவருடன் நமது நேரத்தை செலவழிக்க முன்வர வேண்டும்.
இன்றையதினம் யாருக்காக நீங்கள் தியாகம் பண்ணப்போகிறீர்கள்?
இயேவின் தியாகம், நம்மையும் பிறருக்காக தியாகம் பண்ணத் தூண்டுகிறது.