மாற்றத்திற்கு தயாரா?
நாம் தேர்ச்சிபெற நினைக்கும் காரியங்களில், அநேகமாக இச்சையடக்கமே கடினமான ஒன்றாக இருக்கக்கூடும். எத்தனை முறைகள் ஒரு மோசமான பழக்கவழக்கத்தினால் அல்லது மட்டமான மனப்பான்மையினால் இல்லையெனில் தவறான மனப்போக்கினால் நாம் தோற்கடிக்கப்பட்டிருக்கிறோம். நாம் மனந்திரும்பும்படி உறுதிமொழி எடுக்கிறோம். யாரையாவது நமக்கு பொறுப்பாளியாக நாம் கணக்கொப்புவிக்கும்படியாக இருக்கக் கேட்கிறோம். ஆனால் நாம் மனம் மாற தேவையான பெலனோ, திறனோ நமக்கு இல்லை என்பது நமது உள்ளத்தின் ஆழத்திலே நமக்குத் தெரியும். நாம் அதைக்குறித்து பேசலாம், திட்டமிடலாம், சுய உதவி புத்தகங்கள் வாசிக்கலாம். ஆனால், நமக்குள் இருக்கும் வேண்டாத…
திருமணத்திற்கு தயார்
“எனக்குப் பசிக்கிறது”, என்று என்னுடைய எட்டு வயது மகள் கூறினாள். அதற்கு நான், “மன்னித்துவிடு, உனக்கு கொடுப்பதற்கு என்னிடம் ஒன்றும் இல்லை. நாம் டிக்-டாக்-டோ விளையாடலாம்” என அவளிடம் கூறினேன். ஒரு மதிய வேளை திருமணத்தில் கலந்துக் கொள்ளும்படியாய் ஆலயத்திலே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதப்பட்டு கொண்டிருக்கும் மணமகளின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தோம். இன்னும் எவ்வளவு நேரம் ஆகக்கூடும் என்று தெரியவில்லை. ஆயினும் திருமணம் தொடங்கும் வரையில் எப்படியாவது என் மகளை சமாளித்து விடலாம் என்று நம்பிக் கொண்டிருந்தேன்.
நாங்கள் காத்துக் கொண்டிருக்கையில்,…
அவசரகால ஜெபம்
2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் நாள், உலக வர்த்தக மையத்தின் தெற்கு கோபுரத்தின் 81வது தளத்தில், தனது அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஸ்டான்லி பிரேம்நாத் (Stanley Praimnath) ஒரு விமானம் தன்னை நோக்கி பறந்து வருவதைக் கண்டு, “தேவனே, என்னால் இது கூடாத காரியம்! நீர் பார்த்துக்கொள்ளும்!” என்று அவசரமாக ஒரு ஜெபத்தை செய்துவிட்டு தன்னுடைய மேஜையின் கீழ் பாதுகாப்பு கருதி விரைவாய் ஒளிந்துக்கொண்டார்.
மோசமான விமான தாக்குதலின் விளைவால், ஏற்பட்ட இடிபாடுகளுக்குள் ஸ்டான்லி மாட்டிக்கொண்டார். சுவர் போல மூடியிருந்த அக்குப்பை மேட்டிற்குள்ளிருந்து,…
ஏவியின் தீர்மானம்
ஒரு அமெரிக்க உயர்நிலைப் பள்ளியிலுள்ள பாடகர் குழுவின் 25 வாலிபப் பெண்களில் ஒருத்தியாக ஏவியும் (Evie), ஜமாய்க்கா நாட்டிற்கு சென்று வேறு கலாசாரத்தையுடைய மற்றோரு தலைமுறையினருக்கு தேவனுடைய அன்பைக் காண்பிக்கவும், சாட்சி பகிரவும், பாடவும் பயணித்தாள். ஏவிக்கு அப்பயணத்தின் ஒரு நாள் மிகவும் மறக்கமுடியாததாகவும், சந்தோஷம் நிறைந்ததாகவும் அமைந்தது.
அன்று அப்பாடகர் குழுவினர் ஒரு தனியார் மருத்துவ விடுதிக்கு சென்று பாடவும், அங்குள்ளவர்களை சந்திக்கவும் சென்றனர். அவர்கள் பாடி முடித்த பின்பு ஏவி, அவ்விடுதியில் தங்கியிருந்த 30 வயதுள்ள ஒரு பெண்ணின் அருகில் அமர்ந்தாள்.…
எது பிரதானமானது
வயதாக ஆக, இயேசுவின் பிரியமான சீஷனாகிய யோவானுடைய உபதேசங்களின் எல்லை குறுகிக்கொண்டே போய், அவருடைய மூன்று கடிதங்களிலும் தேவனுடைய அன்பைக் குறித்தே முழு கவனத்தையும் செலுத்தினார். ‘தேவனுடைய அன்பைக் குறித்தான உண்மையை அறிந்துகொள்ளுதல்’ (Knowing the truth of God’s love) என்கின்ற தன்னுடைய புத்தகத்தில், பீட்டர் க்ரீஃப்ட் (Peter Kreeft) ஒரு பழமையான கதையொன்றை குறிப்பிட்டுள்ளார். அதாவது ஒரு நாள் யோவானுடைய இளம் சீடர்களில் ஒருவன் அவரிடம் வந்து, “ஏன் நீங்கள் வேறொன்றைக்குறித்தும் பேசுவதில்லை” என முறையிட்டான். அதற்கு யோவான், “அதைத்தவிர வேறொன்றுமில்லையே”…