ஒரு கச்சேரியை கேட்டுக் கொண்டிருந்த பொழுது, என்னுடைய கவனம் திசைமாறி தேவைப்பட்ட ஒரு பிரச்சனைக்குரிய காரியத்திற்கு நேராய் கச்சேரியிலிருந்து வழிமாறி என் மனம் சென்றது. நல்ல வேளையாக, சிறிது நேரத்திலேயே என் உள்ளத்தின் ஆழத்திற்குள் ஒரு அழகான பாடல் கடந்து வந்த பொழுது அக்கவனச்சிதைவு விலகியது. ஒரு ஆண்கள் அகப்பெல்லா குழுவினர் (வாத்தியங்கள் இல்லாமல் பாடுபவர்கள்) “என் ஆத்துமாவே, நீ அமர்ந்திரு”, (Be Still My Soul) என்னும் பாடலை பாடிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது, அந்த வார்த்தைகளை கேட்டவாறு, தேவனாலே மாத்திரம் கொடுக்கக்கூடிய சமாதானத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்த பொழுது, என் கண்களில் கண்ணீர் நிரம்பியது
என் ஆத்துமாவே, நீ அமர்ந்திரு; தேவன் உன் பட்சத்தில் இருக்கிறார்! பொறுமையோடே துயரத்தின் அல்லது தேவனையின் சிலுவையை தாங்கிக் கொள். உன் தேவனே உன்னை சீர்படுத்தவும், பராமரிக்கவும் விட்டுவிடு; எல்லா மாற்றங்களிலும் அவர் உண்மை உள்ளவராகவே இருப்பார்.
திரளான பலத்த அற்புதங்களைக் கண்டும், மனம் திரும்பாத கடின இருதயம் கொண்ட பட்டணங்களை இயேசு கடிந்து கொண்டபோதிலும் (மத். 11:20-24), அவரண்டை வந்தவர்களுக்கு ஆறுதலான வார்த்தைகளையே கூறினார். “வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்;…. நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்” (வச. 28-29).
இது மிக அழுத்தமான வாக்கியம். ஏனெனில், தன்னை நிராகரித்தவர்களை மிக கடுமையான வார்த்தைகளால் கண்டித்தவுடனேயே, நாமெல்லோரும் ஏங்கிக்கொண்டிருக்கும் இளைப்பாறுதலை கண்டடைவதற்கு எல்லோருக்கும் அழைப்பு விடுக்கிறார். அமைதியற்று இளைப்படைந்த நம்முடைய ஆத்துமாக்களை இயேசுவால் மாத்திரமே அமைதிப்படுத்த முடியும்.