“எனக்குப் பசிக்கிறது”, என்று என்னுடைய எட்டு வயது மகள் கூறினாள். அதற்கு நான், “மன்னித்துவிடு, உனக்கு கொடுப்பதற்கு என்னிடம் ஒன்றும் இல்லை. நாம் டிக்-டாக்-டோ விளையாடலாம்” என அவளிடம் கூறினேன். ஒரு மதிய வேளை திருமணத்தில் கலந்துக் கொள்ளும்படியாய் ஆலயத்திலே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதப்பட்டு கொண்டிருக்கும் மணமகளின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தோம். இன்னும் எவ்வளவு நேரம் ஆகக்கூடும் என்று தெரியவில்லை. ஆயினும் திருமணம் தொடங்கும் வரையில் எப்படியாவது என் மகளை சமாளித்து விடலாம் என்று நம்பிக் கொண்டிருந்தேன்.
நாங்கள் காத்துக் கொண்டிருக்கையில், ஒரு உவமையை அரங்கேற்றிக் கொண்டிருப்பது போல தோன்றியது. ஆலயத்திலிருந்து கூப்பிடும் தொலைவில் தான் ஆயருக்கான எங்கள் இல்லம் இருந்தது. ஆனால், என் மகளுக்காக சில தின்பண்டங்கள் எடுத்து வருவதற்குள், மணமகள் வந்து விட்டால், அவளுடைய வரவேற்பில் கலந்துகொள்ள கூடாமல் போகும். பசியாய் இருந்ந என் மகளுடைய கவனத்தை பசியிலிருந்து திசைத்திருப்ப பல உத்திகளை கையாண்டு கொண்டே, பத்துக் கன்னிகைகளைக் குறித்த இயேசுவின் உவமையை நினைத்துப் பார்த்தேன் (மத். 25:1-13). மணவாளன் வரும் வரை அணையாமல் ஏந்திக் கொண்டிருக்க போதுமான எண்ணெயோடு ஐந்து கன்னிகைகளும், போதுமான எண்ணெய் இல்லாமல் ஐந்து கன்னிகைகளும் இருந்தார்கள். எப்படி எனக்கு என் வீட்டிற்கு விரைந்து சென்று வர போதுமான நேரம் இல்லையோ, அப்படியே அக்கன்னிகைகளுக்கும் எண்ணெய் வாங்கி வர போதுமான நேரமில்லை.
இயேசு மறுபடியும் வரும் பொழுது நம்முடைய இருதயத்தின் நிலையை குறித்து அவரிடம் கணக்கு ஒப்புவிக்க உள்ளதால், நாம் ஜாக்கிரதையுள்ளவர்களாய் ஆயத்தப்படும்படி இவ்வுவமையை கூறினார். நாம் அவருக்காக ஆயத்தத்தோடு காத்துக் கொண்டிருக்கிறோமா?