நானும், என்னுடைய கணவர் கார்லும் (Carl) அட்லாண்டிக் சிட்டி (Atlantic City) மர நடைபாதையில் நடந்து கொண்டிருக்கையில் எங்களை கடந்து ஓடிய ஒரு சிறுவன் எங்கள் மேல் நீர்க்குமிழிகளை பொழிந்து சென்றான். எங்களுக்கு சிரமமான அந்நாளின் மகிழ்ச்சிகரமான இலகுவான ஒரு தருணம் அது. மருத்துவமனையில் உள்ள என் கணவருடைய மைத்துனரைக் காணவும், மருத்துவரை சந்திக்க சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் அவருடைய சகோதரிக்கு உதவும் படியாகவும் நாங்கள் அப்பட்டணத்திற்கு வந்திருந்தோம். எங்களுடைய குடும்பத்தின் தேவைகளினால் சிறிது திணறியதால், சிறிது நேரம் ஓய்வு எடுக்கும்படியாக, கடலோர நடைபாதையில் நடந்துகொண்டிருந்தோம்.
அப்பொழுது தான் அந்நீர்க்குமிழிகள் வந்தது. ஒரு குறும்புக்கார சிறுவனால் விளையாட்டாக ஊதப்பட்டு கடலோரக் காற்றினால் எங்களை நோக்கி வந்த சாதாரண நீர்க்குமிழிகள் தான், ஆனால் எனக்கு அவை ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. எனக்கு நீர்க்குமிழிகள் பிடிக்கும். ஆகவே என் அலுவலகத்தில் ஒய்வும், புன்னகையும் தேவைப்படும் பொழுது உபயோகிக்கும் பொருட்டு ஒரு புட்டி வைத்திருப்பேன். அந்நீர்க்குமிழிகளும் பரந்து விரிந்த அட்லாண்டிக் பெருங்கடலும் (Atlantic Ocean) என் நம்பிக்கையை நினைப்பூட்டியது. அதாவது தேவன் எப்பொழுதும் நமதருகிலேயே உள்ளார் என்பதே. அவர் வல்லமையுள்ளவர். எப்பொழுதும் நம்மை விசாரிக்கிறவர். அதுமட்டுமல்லாது அவர் நம்முடைய சிறிய அநுபவங்களையும் கூட கணப்பொழுதில் பயன்படுத்தி, நம்முடைய பாரமான நேரங்களில் அவருடைய சமூகம் நமக்கு கிருபைக்கடலாக இருப்பதை நினைப்பூட்டி உதவுகிறார்.
ஒருவேளை என்றோ ஒரு நாள், நம்முடைய கஷ்டங்கள் அந்நீர்க்குமிழிகள் போல, நித்தியத்தோடு ஒப்பிடும் பொழுது, தற்காலிகமானதாய் காணலாம். “ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்” (2 கொரி. 4:18).