வயது முதிர்ச்சி அடையும் பொழுதுள்ள கஷ்டங்களில் ஒன்று நினைவாற்றலை இழப்பதும், சமீபகால நிகழ்வுகளை மறப்பதும் ஆகும். ஆனால், மறதி வியாதியான அல்ஷைமர் பற்றி ஆராய்ச்சி செய்த நிபுணரான டாக்டர் பென்ஜமின் மாஸ்ட், அவ்வியாதியைப் பற்றி நம்பிக்கை அளிக்கக்கூடிய சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அல்ஷைமர் வியாதியினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மூளை பொதுவாக முற்றிலும் சோர்வுற்றதாகவும், பழக்கப்படுத்திக் கொண்டவைகளை நினைவில் கொண்டதாகவும் இருக்கும். அவர்கள் அறிந்துள்ள பழைய பாடலை கேட்கவும், வரிவிடாமல் பாடவும் அவர்களால் கூடும். ஆவிக்கேற்ற ஒழுக்கங்களான வேதாகமத்தை வாசித்தல், ஜெபித்தல், பாடல்களை பாடுதல் போன்ற செயல்களால் சத்தியமானது மூளையில் “பதித்து விடுகிறது”. அதனால் லேசாக அப்பாடலையோ, வசனத்தையோ முணுமுணுத்தாலே அவைகள் ஞாபகத்திற்கு வந்துவிடும்.

சங்கீதம் 119:11ல் வேதவசனங்களை நம் மனதில் வைத்து வைத்தால் அவை நம்மை பாவம் செய்யவிடாமல் தடுக்கிறது என்பதைப் பற்றி வாசிக்கிறோம். வசனங்கள் நம்மைப் பெலப்படுத்தும், கீழ்ப்படிதலை நமக்குப் போதிக்கும், நமது காலடிகளை நிலைப்படுத்தும் (வச. 28, 67, 133). இது நமக்கு நம்பிக்கையையும், உணர்வையும் தருகிறது (வச.49, 130). நமக்கோ அல்லது நாம் நேசிக்கும் ஒருவருக்கோ ஞாபகசக்தி குறைவுபடுவதை அறியும்பொழுது, அநேக ஆண்டுகளுக்கு முன்பாக மனப்பாடம் செய்த தேவனுடைய வசனங்கள் மனதில் பொக்கிஷமாக வைத்து வைக்கப்பட்டுள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் (வச.11). வாலிபத்தில் இருந்த கூர்மையான சிந்திக்கும் திறனை நமது மனது இழந்தாலும், நமது இருதயத்தில் புதைத்து வைக்கப்பட்டுள்ள தேவனுடைய வசனங்கள் நம்மோடு தொடர்ந்து பேசும் என்று அறிந்திருக்கிறோம்.

நம்மைவிட்டு விலகும் ஞாபகசக்தியோ அல்லது வேறு எந்த நிலைமையோ அவருடைய அன்பிலிருந்தும், கரிசனையிலிருந்தும் நம்மை ஒருக்காலும் பிரிக்க இயலவே இயலாது. எல்லாவற்றிற்கும் மேலாக தேவனுடைய வார்த்தைகள் நம்மிடம் உண்டு.