1964ல் மார்ஷல் மக்லூஹன் “ஊடகங்களே செய்தி”, என்ற வாக்கியத்தை உருவாக்கின காலத்தில், கணினி கிடையாது, கைபேசிகள் அறிவியல் கற்பனைகளாக இருந்தன, வலைத்தளம் இல்லவே இல்லை. இக்காலத்தில் நமது சிந்திக்கும் திறனாற்றல் எண்கள் மூலம் சேகரிக்கப்படும் முறையினால் (Digital) தாக்கம் அடைந்துள்ளதை மார்ஷல் முன்னமே அறிவித்து விட்டார். நிக்கலோஸ் கார் எழுதின த ஷேலோஸ் (The Shallows) என்ற புத்தகத்தில் இணையதளம் நமது மூளைக்கு என்ன செய்கிறது என்பது பற்றி கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார். “தகவல் தொடர்பு சாதனங்கள், நம்முடைய சிந்தனைக்கு வேண்டிய கருத்துக்களைத் தருகின்றன. ஆனால் அவை நாம் சிந்திக்க வேண்டிய முறையையும் உருவாக்கி விடுகின்றன. இந்த வலைத்தளம் நமது கருத்தை ஒருமுகப்படுத்தும் தன்மையையும், ஆழமாக சிந்திக்கும் ஆற்றலையும் கொஞ்சம் கொஞ்சமாக நீக்கி விடுகிறது. நான் எனது கணினியை கையாளுகிறேனோ இல்லையோ என் மனம் வலைத்தளம் மூலம் மிக வேகமாக பரவும் செய்திகளையே வாஞ்சிக்கிறது”.

ரோமாபுரியிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு பவுல் எழுதின செய்தியைப்பற்றி J.B. பிலிப்பு எழுதியுள்ள விளக்கம் எனக்கு மிகவும் பிடிக்கும். “உங்களைச் சுற்றி இருக்கும் உலகம் அதனுடைய விருப்பத்தின்படி உங்களை உருவாக்க விடாதேயுங்கள். ஆனால் தேவன் தாமே உங்களது உள்ளான மனதை மறுரூபப்படுத்த அனுமதியுங்கள். அதன்மூலம் உங்களைக் குறித்த தேவனுடைய திட்டம் நன்மையானதென்றும், அவர் விரும்பும் காரியங்களை நிறைவேற்ற உண்மையான மனப்பக்குவம் அடைய வழிவகுக்கிறது என்றும் உங்களது செயலினால் நிரூபிக்கலாம்” (ரோம. 12:2) என்று அவர் விளக்கியுள்ளார். நம்முடைய எண்ணங்களும், மனதும் நம்மைச் சுற்றியுள்ள உலகத்தினால் உருவாக்கப்படும் இந்தக் காலங்களில் மேலே கூறப்பட்ட வார்த்தைகள் எவ்வளவு உண்மையுள்ளவைகளாக இருக்கின்றன.

நம்மீது பல்வேறு திசைகளிலிருந்து தாக்கும் செய்திகளை நம்மால் கட்டுப்படுத்த இயலாது. ஆனால் நமது எண்ணங்கள் கர்த்தரைப் பற்றியே இருக்கத்தக்கதாகவும், நமது வாழ்க்கையிலுள்ள அவரது பிரசன்னம் நமது சிந்தனைகளை உருவாக்க உதவி செய்யவும் தேவனிடம் நாம் அனுதினமும் மன்றாட வேண்டும்.