நான் பிரிட்டனில் வாழ்ந்து வருவதால் வெயிலின் சூட்டினால் ஏற்படும் தோல் வியாதியைப்பற்றி பொதுவாக நான் கவலைப்படுவதில்லை. ஏனென்றால், இங்கு சூரியன் மிக கடுமையான மேகத்தால் முழுமையாக மூடப்பட்டிருக்கும். சமீபகாலத்தில் நான் ஸ்பெயின் நாட்டில் சில நாட்கள் கழிக்க வேண்டியதிருந்தது. எனது தோல் வெளிறிய நிறத்தில் இருந்ததால், குடையின் நிழலுக்குள் ஓடி ஒளியாமல் பத்து நிமிடங்களுக்கு மட்டும்தான் என்னால் சூரிய ஒளியில் இருக்க முடிந்ததை விரைவில் உணர்ந்தேன்.
மத்திய தரைக்கடலின் சுட்டெரிக்கும் சூரிய கதிரின் தாக்கத்தை நான் எண்ணினபொழுது தேவன் அவரது மக்களின் வலது பக்கத்தில் நிழலாக இருக்கிறார் என்பதின் அர்த்தத்தை ஆழமாக புரிந்து கொண்டேன். மத்திய கிழக்கில் வாழும் மக்கள் சூரியனின் கடுமையான வெப்பத்தை நன்கு அறிவார்கள். ஆகவே சூரியனின் சுட்டெரிக்கும் கதிர்களின் வெப்பத்திலிருந்து தப்ப ஒரு மறைவிடத்தை தேடிக்கண்டு பிடிப்பது அவர்களுக்கு அவசியமாக இருந்தது.
சங்கீதம் 121ல் சங்கீதக்காரன் கர்த்தரை நிழலாகக் கற்பனை பண்ணியுள்ளான். இது கர்த்தருடைய நன்மையான குணத்தையும், உண்மையான தன்மையையும் ஒருவர் அவரது உள்ளத்திற்குள்ளாக பேசிக்கொள்ளும் உரையாடல் போன்றது என்பதை புரிந்து கொள்ளலாம். இந்த சங்கீதத்தை ஜெபத்தில் பயன்படுத்தும் பொழுது, கர்த்தர் நம்மை விட்டு ஒருக்காலும் விலகமாட்டார் என்று உறுதிப்படுத்திக் கொள்ளலாம். ஏனென்றால் அவர் நம்மைச் சுற்றிலும் பாதுகாப்பான அரணாகவுள்ளார். வெயிலின் கடுமைக்குத் தப்பிக்க நாம் எப்படி குடைகளின் கீழ் ஒதுங்குகிறோமோ அதுபோல கர்த்தருக்குள் பாதுகாப்பான இடத்தைப் பெறலாம்.
“வானத்தையும், பூமியையும் உண்டாக்கின கர்த்தரை நோக்கி” (வச.1, 2) நாம் நமது கண்களை ஏறெடுக்கிறோம். ஏனென்றால், நாம் மகிழ்ச்சியாக இருக்கும்பொழுதோ (சூரிய வெளிச்சத்தில்) அல்லது துக்கமான நேரங்களை கழிக்கும்பொழுதோ (மழைகாலத்தில்) தேவனுடைய பாதுகாவல், மனக்கவலை நீக்கப்படுதல், புத்துணர்ச்சி பெறுதல் போன்ற பரிசுகளை அவரிடமிருந்து பெறுகிறோம்.