ஆண்டு தோறும் உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் இரண்டு கோடிக்கும் அதிகமான மக்கள் லண்டனிலுள்ள தூய பவுல் பேராலயத்தைப் பார்க்கச் செல்கிறார்கள். 17ம் நூற்றாண்டின் பிந்திய காலத்தில் சர். கிறிஸ்டோபர் ரென் என்பவரால் வடிவமைத்துக் கட்டப்பட்ட பிரம்மாண்டமான அவ்வாலயத்தைப் பார்ப்பதற்கு வசூலிக்கும் அனுமதிக் கட்டணம் மிகவும் பொருத்தமானதே. கிறிஸ்தவ ஆராதனைக் கூடமான இதைச் சுற்றுலா பயணிகள் பார்ப்பது என்பது முக்கியமான ஒன்றல்ல. ஆனால் “பலதரப்பட்ட மக்கள் அப்பேராலயத்திற்குள் வரும்பொழுது இயேசு கிறிஸ்துவில் தேவனின் மறுரூபமாக்கும் பிரசன்னத்தை உணர்வடையச் செய்வது” தான் பிரதானமான நோக்கமாகும். அவ்வாலயக் கட்டடத்தை நீங்கள் சுற்றிப்பார்த்து அதன் கட்டடக் கலையின் சிறப்புத்தன்மையை ரசித்து மகிழ நீங்கள் அவசியம் நுழைவுக்கட்டணம் செலுத்தியே ஆக வேண்டும். ஆனால் தூய பவுல் பேராலயத்தில் நடைபெறும் அனுதின ஆராதனைகளில் நீங்கள் கலந்து கொள்வதற்குக் கட்டணம் செலுத்த அவசியமில்லை. தேவனுடைய இராஜ்ஜியத்திற்குள் நுழைய எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்? ஆனால் இயேசுகிறிஸ்து தம் மரணத்தினால் அந்த விலைக்கிரயத்தைச் செலுத்தித் தீர்த்ததால் அனுமதி இலவசம். “எல்லாரும் பாவஞ்செய்து, தேவ மகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக் கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்” (ரோம. 3:23–24). நம்முடைய ஆவிக்குரிய தேவைகளை உணர்ந்து, விசுவாசத்தினாலே நம்முடைய பாவங்களுக்காக தேவனுடைய மன்னிப்பைப் பெற்றுக்கொள்ளும் பொழுது, நாம் கிறிஸ்துவுக்குள், புதிதும், அழியாததுமான ஜீவனைப் பெற்றுக்கொள்கிறோம். கிறிஸ்து சிலுவையிலே மரித்து உயிரோடெழுந்து, நமக்கு விலைக்கிரயம் செலுத்தியதால் இன்று நாம் ஓர் புதிதும், ஜீவனுமான மார்க்கத்திற்குள் பிரவேசிக்க முடிகிறது!
அனுமதிக் கட்டணம்
வாசிப்பு: ரோமர் 3:21–26 | ஓராண்டில் வேதாகமம்: சங்கீதம் 54–56; ரோமர் 3
இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்.
ரோமர் 3:24
கிறிஸ்து விலைக்கிரயத்தை செலுத்தியதினிமித்தமாக நாம் தேவனுடைய இராஜ்ஜியத்தில் பிரவேசிக்க முடியும்.
Our Daily Bread Topics:
odb