ஓர் இசைக்கச்சேரியின் போது, பாடகரும், பாடல் இயற்றுபவருமான டேவிட் வில்காக்ஸிடம் பார்வையாளர்களிடமிருந்து வந்த ‘அவர் எவ்வாறு பாடல்களை இயற்றுகிறார்’ என்ற கேள்விக்குப் பதிலளித்தார். பாடல் இயற்றுவதில் மூன்று காரியங்கள் அடங்கியுள்ளது. ஓர் அமைதலான அறை, ஓர் வெற்றுப்பக்கம், நான் ஏதேனும் ஒர் காரியத்தை அறிந்து கொள்ள வேண்டியதிருக்கிறதா? என்ற ஓர் கேள்வி என்று பதிலுரைத்தார். இயேசு கிறிஸ்துவின் சீடர்களாகிய நாம், நமது அன்றாட வாழ்க்கையில் தேவனுடைய திட்டத்தை அறிந்துகொள்ள அவர் கூறிய பதில் மிகவும் அதிசயிக்கத்தக்க அணுகுமுறையாக எனக்குப்பட்டது.
இயேசு மக்களிடையே செய்த ஊழியங்கள் அனைத்தின் மத்தியிலும் தனித்திருந்து ஜெபிக்க நேரம் எடுத்துக்கொண்டார். ஐந்து அப்பம், இரண்டு மீன்களைக் கொண்டு ஐயாயிரம் பேரை போஷித்தபின், இயேசு ஜனங்களை அனுப்பிவிட்டு, தம்முடைய சீடர்களை படவில் ஏறி கலிலேயாக்கடலின் அக்கரைக்கு அனுப்பி விட்டார். “இயேசு ஜனங்களை அனுப்பிவிட்ட பின்பு தனித்து ஜெபம் பண்ண ஓர் மலையின்மேல் ஏறி, சாயங்காலமான போது அங்கே தனிமையாயிருந்தார்” (வச.23).
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே தம் பிதாவிடம் தனித்திருப்பது அவசியம் என்று உணர்ந்திருக்கும் பொழுது, ஒவ்வொரு நாளும் தனித்திருந்து நம் இருதயத்தை அவரிடம் ஊற்றி, அவருடைய வார்த்தையை தியானித்து, அவர் வழியில் நடக்க நம்மை அர்ப்பணிப்பது எவ்வளவு முக்கியம்?
ஓர் அமைதலான அறை – எந்தவிதமான சிந்தனைச் சிதறல்கள் இன்றி ஒரே நோக்கத்தோடு அவரையே நோக்கிப் பார்க்கும் எந்த இடமும் போதுமானது. ஓர் வெற்றுப் பக்கம் – ஏற்றுக்கொள்ளக்கூடிய மனம், ஓர் வெற்றுக் காகிதம், செவிசாய்த்து கேட்பதற்கு விருப்பம்.
நான் ஏதேனும் ஓர் காரியத்தை அறிந்துகொள்ள வேண்டியிருக்கிறதா? “தேவனே, உம்முடைய ஆவியானவர் மூலம் என்னிடம் பேசும். உம்முடைய எழுதப்பட்ட வேதவாக்கியம் நிச்சயமாக உமது வழியில் என்னை நடத்தும்.”
பிதா தான் எந்தக்காரியத்தைச் செய்ய வேண்டும் என்று நினைத்தாரோ, அதை அறிந்தவராய், தான் தனித்திருந்த அமைதியான மலையிலிருந்து புயல் கடுமையாக வீசியடித்த கடலில் இறங்கினார்.