விதவையான மேரி, மோசமான உடல்நிலை பாதிப்பினால் பலவிதமான உடல்நலக் கேடுகளை சந்தித்த பொழுது அவளுடைய மகள், அவளுடைய வீட்டுடன் இணைந்துள்ள புதிய “பாட்டிகள் அறையில்” வந்து தங்க அவளுக்கு அழைப்பு விடுத்தாள். சிநேகிதிகளையும், அவளுடைய பிற குடும்பத்தினரையும் விட்டுவிட்டு பலதூர மைல்களுக்கு அப்பால் செல்லவேண்டியதிருந்தாலும், தேவன் அளித்த பராமரிப்பிற்காக மேரி சந்தோஷப்பட்டாள்.
இந்த புதிய வாழ்க்கை முதல் ஆறு மாதங்கள் மகிழ்ச்சியாகவும், மனரம்மியமாகவும் கடந்த நிலையில், தான் இங்கு வந்தது உண்மையாகவே தேவனுடைய திட்டம் தானா என்ற சந்தேகம் என்னும் சோதனையில் விழுந்து தனக்குள்ளே முறுமுறுக்க ஆரம்பித்தாள். தன்னுடைய கிறிஸ்தவ சிநேகிதிகளின் நட்பை பெரிதும் தான் இழந்துவிட்டதாகவும், தன் விருப்பப்படி, சுதந்தரமாக இப்பொழுது தூரத்தில் உள்ள புதிய ஆலயத்திற்குச் சென்று வர இயலவில்லை என்றும் கருதினாள்.
அப்பொழுது 19ம் நூற்றாண்டின் பிரசித்தி பெற்ற ஊழியக்காரனாகிய சார்லஸ் ஸ்பர்ஜன் எழுதிய “இப்பொழுது திருப்தி என்பது பரலோக மலர்களில் ஒன்று. அது வளர்க்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். தான் ஒரு காலத்தில் எந்நிலையில் இருந்தேன் என்பதை அவர் அறியாதவர் போல “நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாக இருக்கக் கற்றுக்கொண்டேன்” என்று பவுல் அப்போஸ்தலன் கூறுகிறார்.
தீவிர ஆர்வம் கொண்டுள்ள சுவிசேஷகர் பவுல் அப்போஸ்தலன் சிறையில் அடைபட்டு, நண்பர்களால் கைவிடப்பட்டு, சிரச்சேதம் பண்ணப்படுவதை எதிர்பார்த்துக்கொண்டிருந்த அவர் மனரம்மியமாக இருக்கும்பொழுது, தன்னால் மனரம்மியமாக இருக்க முடியும் என்று மேரி தீர்மானித்தாள்.
“இந்த பாடத்தை நான் கற்றுக்கொள்ளும்வரை, தேவன் தீர்மானத்தின்படி நான் அங்கு சென்றதை நான் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ளாதவளாய் இருந்தேன்” என்று மேரி கூறினாள். “எனவேதான் முறுமுறுத்த பாவத்தை தேவனிடம் அறிக்கையிட்டு மன்னிப்புக் கேட்டேன்.” அதன்பின்பு, வெகு சீக்கிரத்தில் ஓய்வுபெற்ற பெண்மணி ஒருவர், “நாம் இருவரும் சேர்ந்து ஜெபிப்போமா?” என்று கேட்டாள். வேறுசிலர் ஆலயத்திற்கு என்னைக் காரில் கூட்டிச்செல்ல முன் வந்தார்கள். இவ்வாறு எனக்குத் தேவையான அந்த ஆத்தும சிநேகிதி மற்றும் ஆலயம் சென்று வருவதற்கான வசதிகள் போன்ற என் தேவைகள் மிக ஆச்சரியமாகச் சந்திக்கப்பட்டன.