என் நண்பன் என்னிடம் “நான் ஒரு செயலர்” என்று கூறினான். இதையே மக்களிடம் கூறினால், அவர்கள் என்னை சற்று பரிதாபமாகப் பார்ப்பார்கள். ஆனால் நான் எதற்கு செயலராக இருக்கிறேன் என்று அறிந்து கொண்டால், என்னை ஆச்சரியத்துடன் பார்ப்பார்கள்” என்று கூறினான். வேறுவிதத்தில் கூறப்போனால் ஐசுவரியவான்கள் அல்லது பிரபலமிக்க மக்களைச் சார்ந்துள்ள பணிகளல்லாது, வேறு விதமான பணிகளைச் சமுதாயம் தரக்குறைவாகவே தீர்மானிக்கிறது.
எந்தவிதமான பணியாக இருந்தாலும், எப்படிப்பட்ட உலகப்பிரகாரமான எஜமானாக இருந்தாலும், தேவனுடைய பிள்ளைகள் நாம் இயேசுவுக்கே ஊழியம் செய்கிறோம் என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம். எபேசியர் 6ம் அதிகாரத்தில் இயேசு வேலைக்காரருக்கும், எஜமான்களுக்கும் ஆலோசனை கூறுகிறார். பரலோகத்தில் இருக்கும் ஒரே எஜமானருக்கே இருதரப்பினரும் ஊழியம் செய்கிறோம் என்று அறிவுறுத்துகிறார். எனவே ஒவ்வொரு காரியத்தையும் உத்தம இருதயத்தோடும், நேர்மையாகவும், பயபக்தியோடும் செய்ய வேண்டும். ஏனென்றால் நாம் இயேசுவுக்கு ஊழியம் செய்கிறோம். பவுல் அப்போஸ்தலன் கூறுவதுபோல “மனுஷருக்கென்று ஊழியம் செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்மனதோடே ஊழியம் செய்ய வேண்டும்” (எபே. 6:8).
தொலைபேசியில் பேசினாலும், காரை ஓட்டிச்சென்றாலும், வீட்டுவேலைகளைச் செய்தாலும், வியாபாரம் செய்தாலும், இவ்வாறு எப்பணியைச் செய்தாலும் நாம் செய்யும் எல்லாப் பணிகளையும் தேவனுக்குப் பணி செய்கிறோம் என்று எண்ணுவது எவ்வளவு பெரிய சிலாக்கியம்! நாம் எப்படிப்பட்ட பணியைச் செய்தாலும் தேவனுக்கே சேவை செய்கிறோம் என்ற மனப்பான்மையோடு இன்றைய பணியை சிரித்த முகத்துடன் செய்யக்கடவோம்.