Archives: மே 2016

இடிபாடுகளிலிருந்து புதுப்பிக்கப்படல்

எருசலேமிலுள்ள யூத குடியிருப்பில் “டிப்பரெட் இஸ்ரயேல்” என்ற ஜெப ஆலயத்தை நீங்கள் காணலாம். 19ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அந்த ஜெப ஆலயம், 1948ம் ஆண்டு நடந்த அரேபிய இஸ்ரேலிய யுத்தத்தின்போது படை வீரர்களால் டைனமைட் வெடிவைத்து சிதைக்கப்பட்டது.

அநேக ஆண்டுகளாக அந்த இடம் பாழடைந்த நிலையில் கிடந்தது. பின்னர் 2014ம் ஆண்டு அதை மறுபடியும் புதுப்பிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது. நகரத்தின் அதிகாரிகள் இடிபாடுகளிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு கல்லை, புதிய கட்டிடத்திற்கு மூலைக்கல்லாக வைத்தார்கள். அதில் ஒருவர் “கர்த்தாவே, எங்களை உம்மிடத்தில் திருப்பிக்கொள்ளும், அப்பொழுது திரும்புவோம்;…

எனக்கு தேவையானது அதுதான்

அலாஸ்காவிலுள்ள பால்மர் என்ற நகரத்தில், முதியோர் இல்லத்தில் ஓர் அறையின் பின் பகுதியில் நின்று கொண்டு எனது மகளுடைய உயர்நிலைப்பள்ளியின் பாடகர் குழு “என் ஆத்துமாவிற்கு எல்லாம் நன்றாக உள்ளது” என்ற பாடலைப் பாடுவதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். பாடல் குழுவின் தலைவியான என் மகள், அந்தப் பாடலை ஏன் தேர்ந்தெடுத்தாள் என்று சிந்தித்தேன். அந்தப்பாடல் அவளது சகோதரி மெலிசாவின் அடக்க ஆராதனையில் பாடப்பட்ட பாடலாகும். அந்தப்பாடலைக் கேட்பது என் உணர்வுகளைக் கடுமையாகப் பாதிக்கும் என்பதை என் மகள் லிசா அறிந்திருந்தாள்.

நான், என் சூழ்நிலையை…

அதன் ஊடாகப் பிரகாசியுங்கள்

ஒரு பரிசுத்தவான் எப்படி இருப்பாரென்று தெரிந்துகொள்ள ஒரு சிறுமி விரும்பினாள். ஒரு நாள் அவளுடைய தாயார் பிரமாண்டமாகவும், மிக அழகாகவும் வேதாகம காட்சிகளை வண்ணம் தீட்டியிருந்த கண்ணாடி ஜன்னல்களை உடைய பேராலயம் ஒன்றிற்கு அவளை அழைத்துச் சென்றார்கள். அவற்றின் அழகைப் பார்த்த அவள், “இப்பொழுது பரிசுத்தவான் யார் என்பதை அறிந்து கொண்டேன். தங்கள் மூலமாக ஒளியைப் பிரகாசிப்பவர்களே பரிசுத்தவான்கள்” என்று சத்தமாகக் கூறினாள்.

பரிசுத்தவான்கள் என்றால், எந்தவிதமான குற்றமும் புரியாமல் இயேசுவைப்போல அற்புதங்களைச் செய்த கடந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் என்று, நம்மில் பலர்…

மீட்டெடுக்கும் தொழில்

ஆதாம் மின்ட்டர் தேவையற்ற பழைய பொருட்களை வாங்கும், விற்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். பழைய தேவையற்ற பொருட்களை வாங்கும், விற்கும் தொழில் செய்பவரின் மகனான இவர், அப்பொருட்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக உலகமெங்கும் சுற்றி வருகிறார். ‘பழைய தேவையற்ற பொருட்களால் நிறைந்த கோள்’ என்ற அவரது புத்தகத்தில், இக்குப்பைகளை மறு சுழற்சி செய்யும் தொழில் பல கோடி டாலர் கிடைக்கக் கூடியதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். உலகமெங்குமுள்ள தொழில் முனைவர்கள், பயன்படுத்த இயலாது என்று தள்ளப்பட்ட தாமிரக் கம்பிகள், அழுக்கான கந்தைத் துணிகள், உடைந்த பிளாஸ்டிக்குகள்…