காணாதிருந்தும் அன்புகூரப்படல்
தற்காலத்தில் பிளாகிங்-ஐ (Blogging) பயன்படுத்தும் குழுவினரைப்போலவே, பிளாகிங் மூலம் அறியப்பட்ட புரூஸ்C என்பவரை நான் ஒருக்காலும் முகமுகமாய் சந்தித்ததே கிடையாது. ஆயினும் அவரது மனைவி, அவளது கணவர் மரித்து விட்டதாக அவள் இணைந்துள்ள கூட்டத்தாருக்கு செய்தி அனுப்பினபொழுது, பல்வேறு தூரமான இடங்களிலிருந்து அநேக மக்கள் அச்செய்திக்கு அளித்த மறுமொழியின் மூலமாக, நாங்கள் அனைவரும் ஒரு சிநேகிதரை இழந்துவிட்டோம் என்பதை அறிந்தோம்.
புரூஸ்C, அவரது மனதைத் திறந்து அடிக்கடி எங்களிடம் பேசியுள்ளார். பிறர்மேல் அவருக்கிருந்த கரிசனையைப் பற்றியும், அவரது வாழ்க்கையில் அவருக்கு முக்கியமானது என்ன என்பது…
அன்பிற்கான தூதுவர்
ஒரு போதகராக நான் பணியாற்றி வந்தபொழுது, சில மக்கள், அவர்களுக்குச் சற்றுக் கூடுதலாக ஆன்மீக உதவி செய்ய இயலுமா என்று என்னிடம் கேட்பார்கள். அவர்களோடு என் நேரத்தை செலவிடுவது எனக்கு சந்தோஷமாக இருக்கும். அவ்வாறு செய்யும்பொழுது, அவர்களுக்கு நான் கற்றுத்தருவதை விட நான் அதிகமாக அந்த நேரத்தில் கற்றுக்கொள்வேன். ஒரு நாள் உண்மையான ஒரு புதிய கிறிஸ்தவர் அவரது கஷ்டங்களை சகித்தவராக “வேதத்தை வாசிப்பது எனக்கு சிறந்த காரியமல்லவென்று எண்ணுகிறேன். தேவன் என்னிடம் எதிர்பார்ப்பது என்ன என்பது பற்றி அதிகமாக வாசிக்கும்பொழுது, வேதவசனத்தை வாசித்தும்…
புதிதாக ஆரம்பியுங்கள்
எனது இளம் பிராயத்தில் லூசி மாட்மாண்ட் கோமரி எழுதின “கிரீன் கேபிளுடைய ஆனி” என்ற புத்தகம், எனக்கு மிகவும் பிடித்த புத்தகங்களில் ஒன்றாக இருந்தது. அப்புத்தகத்தில் வேடிக்கையான ஒரு பகுதியில், ஆனி, அவள் செய்து கொண்டிருந்த கேக்கில் வனிலா எசன்ஸ் சேர்ப்பதற்குப் பதிலாக தோலில் போடும் மருந்தை போட்டு விட்டாள். பின்பு கோபத்துடன் இருந்த அவளது காப்பாளரிடம் “இன்னமும் எந்த தவறுதல்களும் நடந்திராத நாளையதினத்தை எண்ணிப்பார்ப்பது மிகவும் நன்றாக இருக்கிறதல்லவா?” என்று நம்பிக்கையுடன் அறிவித்தாள்.
நானும் கூட அவ்வாறுதான் எண்ணினேன். நாளையதினம் ஒரு புதிய…
நமது தெய்வீகப் பாதுகாப்பு
நெகேமியாவின் மேற்பார்வையில், இஸ்ரவேல் மக்கள் எருசலேமின் இடிந்துபோன மதிலை மறுபடியும் புதுப்பித்துக் கட்டினார்கள். ஏறக்குறைய பாதி வேலைகள் முடிக்கப்பட்ட தருணத்தில் அவர்களுடைய எதிரிகள் எருசலேமைத் தாக்க வருகிறார்கள் என்ற செய்தியை அறிந்தார்கள். சரீரத்தில் ஏற்கனவே களைப்படைந்த பணியாட்களை இந்தச் செய்தி அவர்களது மனதை இளக்கரித்துப்போகச் செய்தது.
நெகேமியா இதற்காக உடனே ஏதாவது செய்ய வேண்டிய நிலையில் இருந்தான். அவன் முதலாவது ஜெபம் பண்ணினான். பின்பு, மிக முக்கியமான இடங்களில் அநேக காவல்காரர்களை வைத்தான். வேலை செய்பவர்கள் அனைவரும் ஆயுதங்களை ஒரு கரத்தில் பிடித்துக் கொண்டிருக்கும்படி…