ஆப்பிரிக்காவிலுள்ள சகாரா வெளியில் நான் சிறுவனாக வாழ்ந்து வந்த காலத்தில், “நாங்கள் படுக்கைக்கு போகுமுன்பு எங்களது தாயார் எங்களுக்கு காரமான மிளகாயைக் கொடுப்பார்கள். எங்களது வாயில் ஏற்படும் காரத்தன்மையை குறைப்பதற்காக, அதிக அளவு தண்ணீர் குடிப்போம். அப்பொழுது எங்களது வயிறு நிரம்பின உணர்வைப் பெறுவோம். ஆனால், அது உண்மையில் எங்களை திருப்திபடுத்தவில்லை” என்று சாமுவேல் வறுமையினால் கஷ்டப்பட்ட நாட்களை நினைவு கூர்ந்தான்.
அரசாங்கம் கொடுத்த கடுமையான தொல்லைகளினால் சாமுவேலின் தகப்பனார் அவரது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஊரைவிட்டு ஓடி விட்டார். சாமுவேலின் தாயார் தனிமையாக இருந்து பிள்ளைகளை காப்பாற்ற வேண்டியதிருந்தது. அவனது சகோதரன் பயங்கரமான இரத்த சோகை வியாதியினால் பீடிக்கப்பட்டான். அவனுக்குத் தேவையான மருத்துவ உதவியை அவர்களால் செய்ய இயலவில்லை. அவர்களது தாயார் அவர்களை ஆலயத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அதினால் எந்த பயனும் இருந்ததாக சாமுவேல் உணரவில்லை. அவர்களது குடும்பம் அப்படியாக கஷ்டப்பட தேவன் எப்படி அனுமதிக்கிறார் என்று அவன் ஆழமாக சிந்தித்தான்.
பின்பு ஒரு நாள் ஒரு மனிதர் அவர்களது குடும்பத்தின் கஷ்டங்களைக் குறித்து கேள்விப்பட்டார். அவர்களுக்குத் தேவையான மருந்துகள் அனைத்தையும் அவர் வாங்கி அவர்களுக்கு கொடுத்தார். “ஞாயிற்றுக்கிழமை இந்த மனிதர் செல்லும் ஆலயத்திற்குச் செல்லுவோம்” என்று அவனது தாயார் அறிவித்தார்கள். அந்த சபை வேறுபட்டு இருந்ததாக சாமுவேல் உடனே உணர்ந்தான். இயேசுவோடுகூட அவர்களுக்கு இருந்த உறவை, அவருடைய அன்பினை வாழ்ந்து காண்பிப்பதின் மூலம் மகிழ்ச்சியடைந்தார்கள்.
இது நடந்து முப்பது ஆண்டுகள் கடந்து விட்டன. உலகத்தின் இந்தப் பகுதியில் சாம் இருபது சபைகளை கட்டி எழுப்பியுள்ளான். ஒரு பெரிய பள்ளிக்கூடம், ஓர் அனாதை விடுதி இவைகளையும் கட்டியுள்ளான். “திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்” (யாக். 1:22) என்று கூறின இயேசுவின் சகோதரனான யாக்கோபைப் போல உண்மையான கிறிஸ்தவத்தின் தன்மையை சாம் தொடர்ந்து செயலில் காண்பித்து விட்டான்.
“திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது (யாக். 1:27).
இயேசுவின் நாமத்தினால் செய்யப்பட்ட ஒரு சிறிய அன்பின் செயலினால் ஏற்படக்கூடிய விளைவை வார்த்தைகளால் சொல்ல இயலாது.