எனது இளம் பிராயத்தில் லூசி மாட்மாண்ட் கோமரி எழுதின “கிரீன் கேபிளுடைய ஆனி” என்ற புத்தகம், எனக்கு மிகவும் பிடித்த புத்தகங்களில் ஒன்றாக இருந்தது. அப்புத்தகத்தில் வேடிக்கையான ஒரு பகுதியில், ஆனி, அவள் செய்து கொண்டிருந்த கேக்கில் வனிலா எசன்ஸ் சேர்ப்பதற்குப் பதிலாக தோலில் போடும் மருந்தை போட்டு விட்டாள். பின்பு கோபத்துடன் இருந்த அவளது காப்பாளரிடம் “இன்னமும் எந்த தவறுதல்களும் நடந்திராத நாளையதினத்தை எண்ணிப்பார்ப்பது மிகவும் நன்றாக இருக்கிறதல்லவா?” என்று நம்பிக்கையுடன் அறிவித்தாள்.
நானும் கூட அவ்வாறுதான் எண்ணினேன். நாளையதினம் ஒரு புதிய நாள் – நாம் புதிதாக ஆரம்பிக்கக்கூடிய நாள். நாமனைவருமே தவறு செய்கிறோம். பாவம் என்று வரும்பொழுது, தேவன் அவற்றை மன்னிப்பதினால் ஒவ்வொரு காலை வேளையையும் நாம் புதிதாக எந்தவிதப் பாவமும் இல்லாமல் ஆரம்பிக்க முடிகிறது. நாம் மனம்திரும்பும்பொழுது அவர் நமது பாவங்களை நினைப்பதே கிடையாது (எரே. 31:34; எபி. 8:12).
நம்மில் ஒரு சிலர், நமது வாழ்க்கையில் தவறுதலான தேர்ந்தெடுத்தலை செய்து விடுகிறோம். தேவனுடைய பார்வையில் நம்முடைய, பழைய கால வார்த்தைகளும், செயல்களும் நமது எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்லி முடியாது. எப்பொழுதுமே ஒரு புதிய ஆரம்பம் உண்டு. அவரிடம் மன்னிப்பைக் கேட்கும்பொழுது தேவனோடும் பிறரோடும் ஒப்புரவாகுதலுக்கான முதல் படியை எடுத்து வைக்கிறோம்.
“நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” (1 யோவா. 1:9).
தேவனுடைய இரக்கங்களும், உண்மையும் காலைதோறும் புதியவைகளாக உள்ளன. (புல. 3:23) ஆகவே நாம் ஒவ்வொரு நாளையும் புதிதாக ஆரம்பிக்க இயலும்.