நெகேமியாவின் மேற்பார்வையில், இஸ்ரவேல் மக்கள் எருசலேமின் இடிந்துபோன மதிலை மறுபடியும் புதுப்பித்துக் கட்டினார்கள். ஏறக்குறைய பாதி வேலைகள் முடிக்கப்பட்ட தருணத்தில் அவர்களுடைய எதிரிகள் எருசலேமைத் தாக்க வருகிறார்கள் என்ற செய்தியை அறிந்தார்கள். சரீரத்தில் ஏற்கனவே களைப்படைந்த பணியாட்களை இந்தச் செய்தி அவர்களது மனதை இளக்கரித்துப்போகச் செய்தது.
நெகேமியா இதற்காக உடனே ஏதாவது செய்ய வேண்டிய நிலையில் இருந்தான். அவன் முதலாவது ஜெபம் பண்ணினான். பின்பு, மிக முக்கியமான இடங்களில் அநேக காவல்காரர்களை வைத்தான். வேலை செய்பவர்கள் அனைவரும் ஆயுதங்களை ஒரு கரத்தில் பிடித்துக் கொண்டிருக்கும்படி செய்தான். “அலங்கத்திலே கட்டுகிறவர்களும், சுமை சுமக்கிறவர்களும், சுமையேற்றுகிறவர்களும், அவரவர் ஒரு கையினாலே வேலை செய்து, மறு கையினாலே ஆயுதம் தரித்திருந்தார்கள். கட்டுகிறவர்கள் அவரவர் தங்கள் பட்டயத்தைத் தங்கள் இடுப்பிலே கட்டிக் கொண்டவர்களாய் வேலை செய்தார்கள்” (நெகே. 4:17–18).
தேவனுடைய இராஜ்ஜியத்தை கட்டிக்கொண்டிருக்கிற நாம், நமது ஆவிக்கேற்ற எதிரியான சாத்தானின் தாக்குதலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள, நாம் ஆயுதம் தரித்தவர்களாக இருக்க வேண்டும். அதாவது தேவனுடைய வசனமே நம்மைப் பாதுகாக்கும் ஆவியின் பட்டயமாகும். தேவ வசனங்களை மனனம் செய்து அவற்றை தியானிக்கும்பொழுது “பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணிவுள்ளவர்களாகிறோம்” (எபே. 6:11). தேவனுக்கென்று பணி செய்வது பயனுள்ளது அல்ல, என்று நாம் எண்ணும்பொழுது, நாம் இயேசுவுக்கென்று செய்யும் அனைத்து செயல்களும் நித்திய நித்தியமாய் பலன் கொடுக்கும் (1 கொரி. 3:11–15) என்ற வாக்குத்தத்தைப் பற்றிக் கொள்ள வேண்டும். தேவன் நம்மைப் பயன்படுத்த முடியாத அளவிற்கு நாம் பாவம் செய்துள்ளோம் என்று அச்சம் கொண்டால், இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் நாம் மன்னிக்கப்பட்டுள்ளோம் என்று நினைவு கூர வேண்டும் (மத். 26:28). நாம் தேவனுக்கு ஊழியம் செய்வதற்கு முயற்சி செய்தால் அதில் தோல்வி அடைந்து விடுவோம் என்று கவலைப்பட்டால் நாம் அவரோடு இணைந்திருந்தால் கனி கொடுப்போம் என்று இயேசு கூறியதை நினைவு கூர வேண்டும் (யோவா. 15:5).
தேவனுடைய வார்த்தையே நமது தெய்வீகப் பாதுகாவல்.