இரும்புக் கொல்லனும், அரசனும்
ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த அலெக்சாண்டர் மாக்கே என்பவர் 1878ம் ஆண்டில் இன்று உகண்டா என்று அழைக்கப்டும் நாட்டிற்குச் சென்று மிஷனரி பணியாற்றிய பொழுது, முட்டீசா என்ற அரசன் அங்கு ஆட்சி செய்து கொண்டிருந்தான், அங்கு மாக்கே, கொல்லன் பட்டறை ஒன்றை முதலாவது நிறுவினார். புதிதாக வந்தவர் தன் கைகளினால் வேலை செய்வதைப் பார்த்து குழப்பத்திற்குள்ளாகி அந்த கிராம மக்கள் அவனைச் சூழ்ந்து கொண்டனர். ஏனென்றால், அவர் செய்யும் வேலை பெண்கள் செய்யும் வேலை என்பதை ஒவ்வொருவரும் அறிந்திருந்தார்கள். அந்தக் காலத்தில் உகண்டாவில் உள்ள ஆண்கள்…
மிக அருகாமையில்
வசந்த காலத் துவக்க முதல் கோடைகால இறுதிவரை மிகவும் கடுமையான காலநிலையை உடைய ஓக்லஹாமாவில் நான் வளர்ந்தேன். ஒரு நாள் மாலைப் பொழுதில் வானம் இருண்ட மேகங்களுடன் கொந்தளித்துக் கொண்டிருந்ததை நினைத்துப் பார்க்கிறேன். தொலைக்காட்சியில் வானிலை அறிவிப்பாளர் “டொர்நாடோ” புயல் வந்து கொண்டிருப்பதை அறிவித்தார். உடனேயே மின்சாரம் தடைபட்டது. உடனே மிக வேகமாக என் பெற்றோரும், என் சகோதரியும், நானும் எங்கள் வீட்டின் பின்புறமுள்ள புயல் பாதுகாப்பு அறைக்கு மர ஏணியின் மூலமாக இறங்கி, புயல் கடந்து செல்லும் வரைக்கும் அங்கே தங்கியிருந்தோம்.
இன்று…
தேவனுடைய காட்சிக் கூடம்
சங்கீதம் 100 தன் கலை வண்ணத்தால் நம் அதரிசனமான தேவனை மகிழ்ந்து கொண்டாட உதவுகிறது. ஒரே நோக்கத்தோடு நாம், அவரை ஆராதனை செய்வது என்பது நம் பார்வைக்கு அப்பாற்பட்டு காணப்படும் பொழுது ஜனங்கள் அவரை பிரஸ்தாபிகிறார்கள்.
இந்த சங்கீதத்தின் கருத்து நயமிக்க சொற்களை ஒரு ஓவியர் தன் தூரிகையில் எடுத்து திரையில் ஓவியம் தீட்டுவதாக கற்பனை செய்து பாருங்கள். அந்த ஓவியத்தில் நம் கண்முன் காட்சியளிப்பது ஓர் உலகம் - “முழு பூமியும்” – பூமியின் குடிகள் எல்லாரும் கர்த்தரை கெம்பீரமாய்ப் பாடினார்கள் (சங்…