அவருடைய கண் மணி
என் சிநேகிதியின் குழந்தையை வலிப்பு நோய் தாக்கியதால், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு விரைந்து எடுத்துச் சென்றார்கள் தன் மகளுக்காக ஜெபித்துக் கொண்டே இருந்த சமயம் அவள் இதயம் வேகமாக பட, பட வென்று துடித்தது, பொங்கிவரும் பாசத்துடன் அந்தப் பிஞ்சுக் கரங்களைப் பற்றி பிடித்திருந்த பொழுது; நாம் தேவனுடைய கண்ணின் மணியைப் போல் அருமையாக இருப்பதால் அவர் எவ்வளவுக்கதிமாய் நம்மை நேசிக்கிறார் என்று சிந்திக்கலானாள்.
பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து தேவ ஜனங்கள் விடுதலை பெற்று எருசலேமுக்கு திரும்பி வந்த பொழுது அவர்களை சகரியா தீர்க்கதரிசி தேவனுடைய…
மாபெரும் தியாகம்
20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் வாழ்ந்த W.T. ஸ்டெட், புதுமைக் கருத்துக்களை கொண்ட ஓர் ஆங்கில பத்திரிக்கை எழுத்தாளர். சமுதாயப் பிரச்சனைகளில் காணப்படும் தர்க்கத்திற்குறியதான காரியங்களைப் பற்றி எழுதுவதில் சிறந்து விளங்கினார். அவர் எழுதி வெளியிட்ட கட்டுரைகளில் இரண்டு கப்பல் பயணம் செய்வோருக்கும், அவர்களின் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு படகுகளின் விகிதத்தில் குறைந்த எண்ணிக்கையுடைய படகுகளுடன் கப்பல்கள் பயணம் செய்வதன் ஆபத்தைக் குறித்து அறிவித்திருந்தார். 1912ம் ஆண்டு ஏப்ரல் 15ம் நாள் வட அட்லாண்டிக் பகுதியில் பயணம் செய்த டைட்டானிக் கப்பல் பனிக்கட்டிப் பாறையில் மோதிச்…
இன்றைய நாள்
1940ம் ஆண்டு டெக்ஸாஸில் உள்ள அபிலெனில் முதல் பெண் மருத்துவரான 27 வயதுள்ள டாக்டர். வெர்ஜீனியா கோனலி பல எதிர்ப்புகளையும், விமரிசனங்களையும் தைரியத்துடன் சந்தித்தார். 2012ம் ஆண்டு அவருடைய 100வது பிறந்த நாளுக்கு சில மாதங்களுக்கு முன்னர் டெக்சாஸ் மருத்துவச் சங்கம் அவருடைய புகழ்மிக்க சேவைக்காக டெக்சாஸின் மதிப்பு மிக்க மருத்துவர் என்ற பட்டத்தைக் கொடுத்து கௌரவித்தது. இந்த இரு குறிப்பிடத்தக்க கால கட்டங்களுக்கிடையே கோனலி, மிகவும் உற்சாகத்துடன் உலகமுழுவதும் சுவிசேஷத்தை பரப்பும் தாகத்தைப் பெற்றவராய், மருத்துவப் பணிப் பயணங்களை மேற்கொண்டு சேவையையே தன்…
இருதயத்தை ஆராய்தல்
நான் சிக்காகோவிற்கு நாள் தோறும் புகை வண்டியில் பயணம் செய்யும் பொழுது எப்பொழுதும் “எழுதப்படாத விதி முறைகளைக்” கடைப்பிடிப்பேன். உதாரணமாக “உன் அருகில் உட்கார்ந்திருப்பவர் உனக்கு அறிமுகமில்லாதவராக இருந்தால் அவருடன் உரையாடாதே” என்பது போன்றவை. இதுவரை நான் சந்தித்த ஒருவர் கூட எனக்கு அந்நியரில்லை. எல்லாருமே பழகினவர்கள். புதியவர்களுடன் பேசுவது என்றால் எனக்கு அலாதிப் பிரியம்! அமைதி காக்கும் விதிமுறைகளை நான் கடைப்பிடித்தாலும் எனக்கு அருகாமையில் உள்ளவர்கள் செய்தித்தாளில் அவர்கள் தேர்ந்தெடுத்து வாசிக்கும் பகுதிகளைக் கொண்டு அவர்களைப்பற்றி சிறிதி அறிந்து கொள்ள இயலும் என்று…