லண்டனில் உள்ள “நேஷனல் காலரி” மாஸ்கோவில் உள்ள “ஸ்டேட் ட்ரெட்யாக்கோவ் போன்ற அருங்காட்சி சாலைகளைச் சென்று பார்ப்பது என்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியளிக்கும். அற்புதமான சில கலைப்படைப்புகள் என்னைக் குழப்பத்திற்குள்ளாக்கும். ஓவியம் தீட்டும் திரைத் சீலையில் தம் மனம்போன்ற வண்ணங்களை அள்ளித்தெளித்தது போன்ற ஒவியங்களை நான் பார்க்கும்பொழுது நான் என்ன பார்க்கிறேன் என்று எனக்கு தெரிவதேயில்லை. ஆனால் அதை வரைந்துள்ள கலைஞர், தன் கலையில் தேர்ச்சி பெற்றவராக இருந்திருப்பார்.
சில சமயங்களில் வேதமும், நமக்கு அவ்வாறு தான் தோன்றும் அவற்றைப் புரிந்து கொள்ள நம்மால் முடியுமா? என்று ஆச்சரியப்படுவோம். எங்கிருந்து நான் வாசிக்கத் துவங்க வேண்டும்? ஒருவேளை பவுலின் வார்த்தைகள் சற்று நமக்கு உதவலாம். தேவ வசனத்தினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்கும் போதனையாக எழுதியிருக்கிறது (ரோம 15:4).
நாம் கற்றுக்கொள்வதற்கும், நம்மை ஊக்கப்படுத்தவும் தேவன் வேதத்தை நமக்குக் கொடுத்திருக்கிறார். தேவனுடைய சிந்தையை அறிந்து கொள்ள உதவுவதற்கு, தம்முடைய ஆவியையும் கொடுத்திருக்கிறார். “சகல சத்தியத்திற்குள்ளும் (நம்மை) வழி நடத்த” ஆவியானவரை அனுப்பியிருக்கிறேன் என்று இயேசு கூறுகிறார் (யேவா 16:13) “நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்குத் தேவனிடத்திலிருந்து புறப்படுகிற ஆவியையேப் பெற்றிருக்கிறோம்”
(1 கொரி 2:12) என்று பவுல் அப்போஸ்தலன் அதை உறுதிப்படுத்துகிறார்.
பரிசுத்த ஆவியின் ஓத்தாசையுடன் வேதத்தை மன உறுதியுடன் வாசிக்கும் பொழுது, தேவன் அவரையும், அவருடைய வழிகளையும் நாம் அறிந்து கொள்ள விரும்புகிறார்.