1402-1472ம் ஆண்டில் வாழ்ந்த நெசாஹால்கொயோட்டில் என்பவரின் பெயர் உச்சரிப்பதற்கு கடினமானது. ஆனால் அவருடைய பெயர் மிகவும் அர்த்தமுள்ள பெயர். அதன் அர்த்தம் என்னவென்றால் “பசியிலிருக்கும் ஓநாய்”. அவர் எழுதும் நூல்கள் ஆத்தும பசியை வெளிக்காட்டுபவையாகக் காணப்படும். இவன், மெக்ஸிக்கோவின் ஆட்சியாளராகவும், கவிஞனாகவும் இருந்தான். ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்னரே “நான் வணங்கும் தெய்வங்கள் கல்லான விக்கிரகங்கள் அவற்றிற்கு பேச்சும் இல்லை, உணர்வும் இல்லை… மிகவும் வல்லமையுள்ள கண்ணுக்கும் புலப்படாத நாம் அறியாத தெய்வம்தான் அண்ட சராசரங்களையும் சிருஷ்டித்தவர்” என்று எழுதியிருந்தான். “அவர் ஒருவரே எனக்கு துன்பத்தில் ஆறுதல் அளிப்பவர். என் மனம் நொந்து வேதனைப்படும் பொழுது உதவிக்கரம் நீட்டுபவரும் அவரே. அவரே எனக்கு உதவுபவராகவும் என் பாதுகாவலனாகவும் இருக்க விரும்புகிறேன்” என்றான். ஜீவன் தருபவரைக் கண்டு கொண்டானோ இல்லையோ என்பதை நாமறியோம். ஆனால், அவனுடைய ஆட்சிகாலத்தில் அழகாகப் பொருட்களை வர்ணம் தீட்டும் தேவனுக்கு என்ற பிரமிட் ஒன்றைக் கட்டினான். தன் நகரத்தில் நரபலி செலுத்துவதற்கு தடை விதித்திருந்தான்.

“என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது” என்று 42ம் சங்கீதத்தை எழுதியவர் கூறுகிறார். மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுகிறதுபோல (வச.1) மனிதர் ஒவ்வொருவரும் உண்மையான தெய்வத்தை வாஞ்சிக்கிறார்கள்.

புகழ், பணம், உறவுகள் போன்ற விக்கிரகங்கள், அவர்களுடைய ஆத்தும வாஞ்சையை பூர்த்திசெய்ய முடியாது என்று அநேக “பசியிலிருக்கும் ஓநாய்களுக்கு” நன்கு தெரியும். நமக்கு ஓர் அர்த்தமுள்ளதும், நிறைவானதுமான ஓர் வாழ்க்கையைத் தர, இயேசுவின் மூலமாகத் தம்மை வெளிப்படுத்திய ஜீவனுள்ள தேவனால் மாத்திரம் தான் முடியும். பொருட்களை அழகாக வர்ணம் தீட்டும் தேவன் மீது வாஞ்சையாயிருக்கும் ஒவ்வொருவருக்கும் இது தான் ஓர் நற்செய்தி!