1980ம் ஆண்டு பாஸ்டன் மரத்தான் ஓட்டத்தின் பொழுது ஒரு பெண் சுரங்கப்பாதையில் செல்லும் இரயிலில் ஏறிக்கொண்டார். அது ஒரு பெரிய காரியமல்ல. ஆனால் ஒரு காரியம். அவள் மரத்தான் ஓட்டத்தில் ஓட வேண்டியவள்! முடிவுக் கோட்டிற்கு ஒரு மைலுக்கு சிறிது தூரத்தில், இரயிலிருந்து குதித்து ஓட்டப்பந்தயத்தில் ஒருவருடன் சேர்ந்து கொண்டதைப் பார்த்தவர்கள் இதைப் பின்னால் கூறினார்கள். ஓட்டப் பந்தயத்தில் ஓடிய பிற பெண்களைவிட, முன்னால் ஓடி முடிவு கோட்டைத் தாண்டினாள். அவளுக்கு மூச்சு வாங்கவோ, அதிகமாய் வியர்க்கவோ இல்லை. கொஞ்ச நேரத்திற்கு அவள் வெற்றி பெற்றவள் போல் காணப்பட்டாள்.
அநேக ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற ஓர் போரில் தோல்வியை சந்தித்து விடுவோம் என்று நினைத்துக் கொண்டிருந்த ஒரு மக்கள் கூட்டம், தாங்கள் வெற்றி பெறுவதற்கு ஓர் புதுமையான வழியைக் கண்டுபிடித்தார்கள். “ஏதோமிலிருந்து உமக்கு விரோதமாய் ஓர் பெரும் படை வருகிறது” என்று யோசபாத் ராஜாவிடம் தூதுவர்கள் வந்து கூறிய பொழுது அவன் பயந்தான் (2 நாளா 20:2,3). முறையாக செயல் படுத்தக்கூடிய போர் தந்திரங்களைத் தவிர்த்து தேவனிடத்திற்கு தன் முகத்தைத் திருப்பினான். தேவனுடைய மாட்சிமை மிக்க அதிகாரத்தையும், தன்னுடைய பயத்தையும், குழப்பத்தையும் ஒத்துக் கொண்டு அதை அறிக்கை செய்தான். “நாங்கள் செய்ய வேண்டியது இன்னதென்று, எங்களுக்குத் தெரியவில்லை, ஆனால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக் கொண்டிருக்கிறது” என்றான் (வச.12). போர்க்களத்திற்கு படையை நடத்திச் செல்ல, அரசன் பாடகர்களை நியமித்தான். யுத்த தொனிக்குப் பதிலாக தேவனுடைய கிருபையைத் துதித்துப் பாடினார்கள் (வச.21). விளைவு திடுக்கிட வைத்தது. அவர்களுடைய சத்துருக்கள் ஒருவருக்கு ஒருவர் விரோதமாய் எழும்பினார்கள் (வச.22-24). இறுதியாக “தேவன் சுற்றுப்புறத்தாரால் யுத்தமில்லாத இளைப்பாறுதலை அவனுக்குக் கட்டளையிட்டதினால், யோசபாத்தின் இராஜ்யபாரம் அமரிக்கையாயிருந்தது” (வச.30).
நம்மை மேற்கொள்ளும் விதத்தில் சவால்கள் திடீரென மறைந்திருந்து நம்மைத் தாக்கலாம். ஆனாலும் நம் பயமும், நிலையற்ற தன்மையும், சர்வ வல்லமையுள்ள தேவனை நோக்கிப்பார்க்க ஓர் தருணத்தை நமக்களிக்கிறது. அவர் வழக்கத்திற்க மாறாக செயல்படுவதில் தனித்தன்மையுடையவர்.