நான் சிக்காகோவிற்கு நாள் தோறும் புகை வண்டியில் பயணம் செய்யும் பொழுது எப்பொழுதும் “எழுதப்படாத விதி முறைகளைக்” கடைப்பிடிப்பேன். உதாரணமாக “உன் அருகில் உட்கார்ந்திருப்பவர் உனக்கு அறிமுகமில்லாதவராக இருந்தால் அவருடன் உரையாடாதே” என்பது போன்றவை. இதுவரை நான் சந்தித்த ஒருவர் கூட எனக்கு அந்நியரில்லை. எல்லாருமே பழகினவர்கள். புதியவர்களுடன் பேசுவது என்றால் எனக்கு அலாதிப் பிரியம்! அமைதி காக்கும் விதிமுறைகளை நான் கடைப்பிடித்தாலும் எனக்கு அருகாமையில் உள்ளவர்கள் செய்தித்தாளில் அவர்கள் தேர்ந்தெடுத்து வாசிக்கும் பகுதிகளைக் கொண்டு அவர்களைப்பற்றி சிறிதி அறிந்து கொள்ள இயலும் என்று உணர்ந்தேன். எனவே அவர்கள் முதலாவது எந்தப் பகுதி பக்கங்களைப் புரட்டிப்பார்க்கிறார்கள் என்று உற்று கவனித்தேன்: வணிகப்பகுதியா? விளையாட்டுப் பகுதியா? அரசியலா? நடப்புச் செய்திகளா? இவ்வாறு அவர்கள் தெரிந்தெடுத்து வாசிப்பதிலிருந்து, அவர்களின் விருப்பம் என்ன என்பது நமக்கு வெளிப்படுகிறது.
நமது தெரிந்தெடுப்பு எப்பொழுதும் நம்மை வெளிப்படுத்தும். ஆனால் தேவனுக்கு நாம் எதைத் தெரிந்தெடுக்கிறோம் என்பதைப் பார்த்து, நாம் யார் என்று அறிந்து கொள்ள அவசியம் இல்லை. ஆனால் நமது நேரத்தையும், நம் கவனத்தையும் எவை ஆட்கொள்ளுகின்றனவோ, அவை தேவனுக்கு நம்மை வெளிப்படுத்தும். உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.” என்று இயேசு கூறுகிறார் (லூக் 12:34). நம்மைப் பற்றி தேவன் என்ன நினைக்கிறார் என்று நாம் நினைப்பது முக்கியமல்ல. நாம் நம் நேரத்தை, நமது பணத்தை, நமது தாலந்துகளை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதை அடிப்படையாகக் கொண்டே நமது உண்மையான தன்மை என்ன என்பது தெளிவாகத் தெரியும். தேவன் விரும்பும் காரியங்களில் நாம் நமக்கு உரியவற்றை செலவளிக்கும் பொழுது, அது தேவனுடன் நம் இருதயம் இசைந்து செயல்படுகிறதா என்பதை வெளிப்படுத்தும்.
தேவனுடைய இருதயம் அப்படிப்பட்ட மக்களையும், தேவராஜ்ஜியத்தின் விரிவாக்கத்தையும் வாஞ்சிக்கிறது. உங்கள் இருதயம் எங்கே இருக்கிறது என்பதை உங்கள் தெரிந்தெடுப்பு அவருக்கும், பிறருக்கும் வெளிப்படுத்துகிறதா?