சங்கீதம் 100 தன் கலை வண்ணத்தால் நம் அதரிசனமான தேவனை மகிழ்ந்து கொண்டாட உதவுகிறது. ஒரே நோக்கத்தோடு நாம், அவரை ஆராதனை செய்வது என்பது நம் பார்வைக்கு அப்பாற்பட்டு காணப்படும் பொழுது ஜனங்கள் அவரை பிரஸ்தாபிகிறார்கள்.
இந்த சங்கீதத்தின் கருத்து நயமிக்க சொற்களை ஒரு ஓவியர் தன் தூரிகையில் எடுத்து திரையில் ஓவியம் தீட்டுவதாக கற்பனை செய்து பாருங்கள். அந்த ஓவியத்தில் நம் கண்முன் காட்சியளிப்பது ஓர் உலகம் – “முழு பூமியும்” – பூமியின் குடிகள் எல்லாரும் கர்த்தரை கெம்பீரமாய்ப் பாடினார்கள் (சங் 100:1). நம் மரணத்திலிருந்து நம்மை விடுவித்ததினால் நாம் மகிழ்ச்சியுடன் அவரைப் போற்றிப் பாடுகிறோம். “அவர் தமக்கு முன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு இயேசு சிலுவையைச் சகித்தார்” (எபி 12:2).
இவ்வாறு, நம் பார்வை அந்த திரை முழுவதையும் கண்ணோட்டம் விடும்பொழுது எண்ணிலடங்கா, எண்ணிக்கையுள்ள உலக பாடகர் குழு “மகிழ்ச்சியோடும், ஆனந்த சத்ததோடும்” அவர் சந்நிதிக்கு முன் வருவதைக் காணலாம் (வச.2). அவர் யார் என்பதற்காகவும், அவருடைய மகத்துவமுள்ள கிரியைகளுக்காகவும் அவருடைய ஜனங்கள் அவரைத் துதித்து ஆராதனை செய்யும் பொழுது நமது பரமபிதாவின் உள்ளம் பூரிப்படைகிறது.
பின் அந்த திரையில் நமது சிருஷ்டிகர், தம் கரத்தினால், நம்மை நேர்த்தியாய் வனைத்துள்ள நமது உருவங்களையும் பார்க்கிறோம். புல்வெளிகளில் ஆடுகளை வழிநடத்துவது போல நம்மை நடத்துகிறார் (வச.3). அவருடைய ஜனங்களாகிய நமக்கு ஓர் அன்புள்ள மேய்ப்பன் உண்டு.
இறுதியாக தேவனின் மகத்துவத்தையும், மகிமையான வாசஸ்தலத்தையும் காண்கிறோம். மீட்கப்பட்டவர்கள், அவர் வாசல்களில் துதியோடும், புகழ்ச்சியோடும் காணக்கூடாத தேவனுடைய பிரசன்னத்திற்குள் போவதையும் காண்கிறோம்.
இக்காட்சி, நம் தேவனால் உண்டான என்ன அருமையான காட்சி! நம் தேவன் நல்லவர், அன்புள்ளவர்; உண்மையுள்ள தேவன். அவர் மகத்துவத்தை நித்திய, நித்திய காலமாய் நாம் அனுபவித்து, மகிழ்ந்து போற்றுவது ஓர் ஆச்சரியமான காரியமல்ல!.