Archives: மார்ச் 2016

நம்மை நாமே கவனித்துக் கொள்ளல்

எனது கணவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்த அன்று, அவரது படுக்கையண்டை இருந்து அந்த இரவை மிகக் கவலையுடன் கழித்தேன். நடுப்பகலில் வழக்கமாக நான் அன்று செய்ய வேண்டிய சிகை திருத்தத்தைப் பற்றி நினைவு கூர்ந்து, சிக்குப் பிடித்த என் தலைமுடியை விரல்களால் போதிவிட்டுக் கொண்டு “நான் அதை ரத்து செய்ய வேண்டும்” என்று கூறினேன்.

“அம்மா, உங்கள் முகத்தைக் கழுவிக் கொண்டு ஏற்கனவே திட்டமிட்டபடி சிகை திருத்தத்திற்கு செல்லுங்கள்” என்று என் மகள் கூறினாள்.
“வேண்டாம், வேண்டாம் பரவாயில்லை, நான் இங்கே இருக்க…

அபிகாயிலின் ஞாபகமூட்டுதல்

ஐஸ்வரியமும், முரட்டு குணமும் உடைய நாபால் எனும் ஒரு மனிதன் தாவீதின் ஆட்கள் கேட்ட உதவிகளை கொடுக்க மறுத்ததால், தாவீதும் அவனுடைய 400 வீரர்களும் நாபாலுடன் போரிட அவனைத் தேடி கர்மேல் பகுதிக்குச் சென்றார்கள். நாபாலின் மனைவி அபிகாயில் தாவீதை இடையில் சந்தித்திருக்காவிட்டால், நிச்சயமாக தாவீது நாபாலை கொன்றிருப்பான். வர இருந்த அழிவை தவிர்க்கக் கூடிய நம்பிக்கையுடன், தாவீதின் படை அனைத்திற்கும் தேவையான உணவை எடுத்துக் கொண்டு நாபாலின் மனைவி தாவீதை சந்திக்கச் சென்றாள். அவள் மிகவும் தாழ்மையுடனும், மரியாதையுடனும், தாவீது அவனது கோபத்தில்…

கை விட்டு விட வேண்டாம்

1952ல் பிளாரன்ஸ் சாட்விக், கலிபோர்னியா கடற்கரையிலிருந்து 26 மைல் தூரத்திலுள்ள கேற்றலினா தீவிற்கு நீந்திச் செல்ல முயற்சி செய்தாள். 15 மணி நேரம் கழித்து கடுமையான பனி மூட்டம் வந்து அவளது பார்வையை மறைத்தது. அதனால் அவள் திசையை சரியாக அறிய இயலாமல் நீந்துவதை கைவிட்டு விட்டாள். அவள் அடைய வேண்டிய இலக்குக்கு ஒருமைல் தூரம் மட்டும் இருக்கும் பொழுதுதான், அவள் அவளது முயற்சியை கைவிட்டிருந்ததை பின்னால் அறிந்து மிகவும் கவலையும் எரிச்சலும் அடைந்தாள்.

இரண்டு மாதங்கள் கழித்து, சாட்விக் மறுபடி இரண்டாவது முறையாக…

பழக்கமில்லாதவர்களும் வெளிநாட்டினரும்

கேம்பிரிட்ஜின் வரைபடத்தை எனது விரல்களால் தடவிப்பார்த்து, நிச்சயப்படுத்திக் கொண்டு என் மிதிவண்டியை நிறுத்தினேன். திசைகள் பற்றி தெளிவில்லாத நிலையில் சரித்திர முக்கியத்துவம் பெற்ற பல கட்டிடங்களைக் கொண்ட அந்த சாலைகளின் வலைபோன்ற அமைப்பில் நான் எளிதாக தொலைந்து போகக் கூடிய நிலையில் இருந்தேன்.

சமீபத்தில் ஒரு ஆங்கிலேயரை திருமணம் செய்ததினால் இங்கிலாந்து நாட்டிற்கு வந்து விட்டேன். எனது வாழ்க்கை மகிழ்ச்சியும் அமைதி நிறைந்ததாக இருந்திருக்க வேண்டும். ஆனால் நான் அப்புதிய இடத்தில் யாரோடும் பிணைக்கப்படாதது போல உணர்ந்தேன். நான் வாய்பேசாமல் இருந்தால் அந்த புதிய…